இரத்தம் சிந்தியது நாகையில்….

இரத்தம் சிந்தியது நாகையில்….
NAGAPATINAM A TRIP …
இனிதே வேளாங்கண்ணியின் முதல்நாள் இரவில் டிபன் சாப்பிட மெயின்ரோட்டில் தேடினோம்.. நல்ல கடையை கண்ணில் படவில்லை, ப்ரோட்டோவும், தோசையும் மட்டுமே பெரும்பாலான கடைகளில் கிடைத்தது. மக்களில் சிலர் இரவு டாஸ்மாக்கை தேடி ஊருக்கு ஒதுக்குபுறமாக கட்டப்பட்ட கடைகளுக்கு சாரிசாரியாக செல்கின்றனர். ஒரு சிலர் போதை அதிகமாக ரோட்டோரத்திலேயே படுத்துஉருள்கிறார்கள்.
பேமிலி ரூமில் 1.0 டன் ஏசியே பயன்படுத்துகிறார்கள், குளிர் குறைவாகவே வருகிறது, காலை 5 மணிக்கு எழுந்து கடற்கரையை நோக்கி போனோம் சூரிய உதயத்தைப்பார்க்க, ஆனால் மேகம் மூடியதால் சரிவர பார்க்க இயலவில்லை. அந்த காலைநேரத்திலும் கணிசமான மக்கள் கடற்கரையில் கூடுகிறார்கள்.

IMG_20170505_181124

கடற்கரை முழுவதும், ஒரே குப்பை பேரூராட்சி தயவுசெய்து சுத்தம் செய்யவும், தன்னார்வ தொண்டுநிறுவனம் அல்லது பேராலாய நிர்வாகமோ தானகவே முன்வந்து சுத்தம் செய்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தலாம், பெரும்பாலான கடற்கரை உணவுகள் சுகாதாரமற்று உள்ளது, கடலில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குடும்பம்குடும்பமாக குளித்து மகிழ்கிறார்கள், ஆனால் அலையில் சிக்கி கடலில் மூழ்கினால், காப்பாற்ற உள்ளூர் மீனவர்கள் உதவினால்தான் உண்டு. அரசு எந்தவிதமான (வெளிநாட்டில் இருப்பதுபோல் உயரமான சேரில் உட்காந்து ஒருவர் விசில் ஊதி எச்சரிப்பார், அல்லது விபத்து நிகழ்தால் உடனே குதித்து நீந்தி காப்பாற்றுவார்,) ஏற்பாட்டையும் செய்யவில்லை என்பது வருத்தற்குரியது, நாகை ஆட்சியர் கவனிப்பாரா.

IMG_20170506_061802

உள்ளூர் மக்கள் அனைத்து கடைகளிலும் திருநீர் பூசிக்கொண்டு மாதா பாடல் கேசட்களையும், இயேசு படத்தினையும விற்பதைப்பார்க்கலாம், இதன்காரணமாகவே வியாபாரம் அவ்வளவாக நடைபெறுவதாக்தெரியவில்லை, ஏதேனும் கன்சல்டண்ட் நிறுவனம் முன்வந்து உள்ளுர் வியாபாரிகளுக்கு கார்ப்ரேட் விற்பனை கலையை சொல்லித்தந்தால், இவர்களும் கார்,வீடு, வாசலுடன் நல்ல வசதியாக வாழவழிவகுக்கும். காலை உணவை லாட்ஜ் ஓனரே தயார் செய்து கொடுக்கிறார். தோசையும், தேநீரூம் நன்றாகவே இருந்து அனைவரும் ரசித்து புசித்தோம். பிறகு லாட்ஜை காலிசெய்துவிட்டு மீண்டும் ஒருமுறை அன்னையை தரிசித்து, தீர்த்தம்கொடுக்கும் இடத்திற்கு சென்றோம், அனைத்து இடத்திலேயும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.
10 மணி அளவில், நாகையை நோக்கி பயணப்பட்டோம், வெகு நாட்களுக்கு பிறகு மழை தூறல் போட்டது. சாலையெல்லாம் கழுவிவிட்டது போல் இருந்தது. நாகை பிரிவில் சரியாக கவனிக்காமல் திருப்பும் பொழுது, எதிரே வந்த அரசுபேருந்தில் மோத இருந்தோம், நல்லவேலையாக, அரசுபேருந்து பிரேக் செய்து நிறுத்தியதால் தப்பினோம். நாகையில் பெட்ரோல் போட பாரத் பெட்ரோலியம் நிலையத்தை தேடிபிடித்து பெட்ரோல் பிடிக்க, கார்டு ஸ்வைப் பண்ண சென்ற இடத்தில் கதவில் இருந்த ஆணி கிழித்து, விரலில் இருந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. பெட்ரோல் நிலையத்தினர் முதலுதவி செய்து இரத்தத்தை நிறுத்தினர். நாகையில் உள்ள நண்பருக்கு காலையிலேயே தகவல் அளித்திருந்தேன், ஆனால் அவரை மீண்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை. எனவே, பலரிடம் விசாரித்து கடற்கரைக்கும், லைட் உறவுஸ்க்கும் சென்றோம், சுநாமியால் தூக்கிவீசப்பட்ட படகு ஒருவீட்டில் மேல் இருப்பதை பார்த்தோம். ஒரே இளசுகளால் கடற்கரை நிரம்பியது பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியதால் உடனடியாக திரும்ப வேண்டியதாயிற்று. நாகை சிறிது முன்னேறியிருப்பதாகவே தோன்றுகிறது, இருப்பினும் பெரும்பாலும் கடல்சார்ந்த மற்றும் விவசாயமே தொழிலாக கொண்டிருப்பதாலும், பொருளாதாரம் சிறப்பாக மேம்படவில்லை என்பதே கண்கூடு. ஐடி நிறுவனம்கள், தொழில்சாலைகள் போன்றவைகள் இந்த நாகை மாவட்டத்தில் நிறுவினால் பலருக்கு வேலை வாய்ப்பும், நகரும் வளர்ச்சியடையும் எனத்தெரிகிறது. சென்னையைப்போன்று கடற்கரையும், கப்பல்வந்து செல்லும் துறைமுகமாக விரிவுபடுத்தினால் (மத்திய மந்திரியோ, மாநில மந்திரியோ கருணை வைத்தால்) நாகையும் முன்னேறலாம், (விலைவாசி அனைத்து இடத்தினைப்போலவே இருக்கிறது) வரும்பொழுது குருட்டாம்போக்கில் நகரின் உள்ளே பல தெருக்களுக்கு சென்று, வெளியேறினோம்.
திருவாரூர் அருகே சரியான போர்டு இல்லாமல், நகரின் உள்ளே சென்று டிராபிக்கில் மாட்டி பிறகு வெளியேறி, வரும்வழியில் ஒரு கிராமத்தில் பிரியாணி ( முட்டை + தக்காளிசாதம்) அனைவருக்கும் பெற்று, வழியிலேயே தண்ணீர் கிடைத்த ஒரு கிராமத்தில் சாப்பிட்டோம் நன்றாகவும், அதிகமாகவும் இருந்தது. தஞசை வரும்வரையில் ரோடு மிகமோசம், 4வழிபாதையாக மாற்றிவருவதால் குண்டும் குழியுமாக ரொம்ப சிரமப்பட்டு வரவேண்டியாதாகப் போயிற்று. ரோட்டேராத்தில் அரைகிலோ மீட்டருக்கு ஒருவராது பழம், சர்பத், இளநீர், பதநீர் போன்றவைகளை விற்பனை செய்கிறார்கள். ஒருசில இடத்தில் இருபுறமும் பசுமைவயல்களாகவும், பல இடத்தில் இருபுறமும் வறண்டும் காணப்பட்டது. தஞசையில் இருந்து அரைமணியில் 4 வழிப்பாதையில் டோ திருச்சியைத்தொட்டு, ரிலையன்ஸ் மார்க்கெட்டுக்கு (வரும் வழியில் இருப்பதால்) சென்று

IMG_20170501_111707

தேவைப்பட்டவைகளையும், தேவைப்படாதவைகளையும் பில் செய்து மீதமிருந்த 2500 ரூபாயையும் காலிசெய்து, நகரில் புதியதாக துவக்கப்பட்ட போத்தீஸ்க்கும் விசிட்செய்து , வேகாத வெயிலில் 4 மணி போல் வீடுவந்து இனிதே இந்த சிறிய சுற்றுலாவை நிறைவுசெய்தோம். இந்த சுற்றுலாவில் நானோவும், எனது டிரைவரும் (மகன்) மிகவும் சிறப்பாகவே செயல்பட்டது மனதுக்கு நிறைவை அளித்தது. வீட்டிற்கு வந்தவுடன்தான், அப்படியே வேதாரண்யம் சென்றிருக்கலாம் என்று குடும்பஉறுப்பினர்கள் மாற்றுக்கருத்தை வைத்தனர்.
Tamil Blogs Traffic Ranking

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s