இன்று உலகெங்கிலும் மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உண்மையில் உலகில் பிறந்த எவரும், மகளிர் இல்லாமல் பிறக்க வாய்ப்பில்லை. மகளிர் என்பவராலேயே இந்த உலகில் அமைதி நிலவி வருகிறது, என்ற கூற்று மிகையில்லை.
சமீபத்தில் 90 எம்எல் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. தயவுசெய்து இந்தப்படத்தை உங்களின் மீது அக்கறையுள்ள எந்த மகளிருக்கும் பார்த்துவிடாமல் இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.
- இந்தப்படத்தில் ஓவியாதான் முக்கிய கதாபாத்திரம், அவருடன் இணைந்து 4 மகளிர்கள் 1) ரவுடியை மணந்த விடலை கதாப்பாத்திரம், 2) பிஸினஸ் மேனை மணந்த வடநாட்டு பெண். 3) சாப்ட்வேர் அம்பியை கைபிடித்த இளநங்கை மற்றும் 4) பணியில் இருக்கும் ஒரு இளநங்கை.
- ஓவியா உடன் கட்டுமஸ்தான இளைஞன் ஒருவனுடன் லிங்விங் டூ கெத்தர் என்ற முறையில் வாழ்க்கையை அனுபவிக்கும் ஓவியா, புதிதாக குடியிருக்க வரும் அபார்மெண்டில் சந்திக்கும் மேற்கண்ட நால்வரைச் சுற்றி மசாலா தடவி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
- தோழிகள் ஒவ்வொருவராக நட்புடன் தங்கள் சோகத்தை பகிர்ந்து கொள்ள அதை ஓவியா தனது நடப்பால் சரிசெய்யவோ அல்லது பிரச்சினையை முடிக்கவோ பார்க்கிறார்.
- சமீப காலத்தில் லிப்கிஸ்கள் அதிகமான அளவில் வரப்பெற்றது இந்தப்படமாகவே இருக்கும்.
- அளவுக்கதிமான இரட்டை வசனங்கள், பெண்கள் தங்கள் உடலை தாங்களே விமர்ச்சித்துக்கொள்ளுதல், உதாரணமாக மார்பு சதை குறைவாக உள்ள பெண். தோழியைப்பார்த்து கடவுள் எனக்கு இரண்டு புள்ளியைத்தான் வைத்திருக்கிறான் என புலம்புவதும்.
- உடலுறவை அனுமதிப்பதற்கு என தங்கள் கற்பை பங்களா என்ற சொல் மூலம் கொச்சைப்படுத்துவதும்… குறிப்பிடத்தக்கது.
- படத்தை நான்கு பகுதிகளாகப்பிரித்து நட்புடன் இருக்கும் மகளிர்கள் முதலில் டாஸ்மாக் சரக்கு பின்னர் பாரின் சரக்கு அப்புறம் கஞ்சா எனபோதை பழக்கத்திற்கு படிப்படியாக ஆளாவதைத் காண்பிக்கிறார்கள்.
- பாதிப்படம் முடிந்தவுடன் 45 எம்எல் என காட்டுவதும், திரை ஆக்கமும், பேக் கிரவுண்ட் மியூசிக், ரவுடிகள் சண்டை, கார்ப்பயணம், மொட்டைமாடியில் பார்ட்டி கொண்டாடுவது, நியூஇயர் கொண்டாட்டமும், சகலகலாவல்லவன் பாட்டை நிறுத்தச்சொல்வதும், கடைசியில், ரவுடி பாண்டியை நால்வரும் சேர்ந்து துவம்சம் செய்வதும் கொஞ்சம் மசாலா தடவிய சினிமா பார்ப்பது போலவும், சிம்பு என்ட்ரியும், லிப் கிஸ் கொடுத்து ஓவியா இணைந்து கொள்வதும், பாண்டிசேரியில் சேஸ் செய்து நட்பின் ஜோடியை சேர்த்து வைப்பதும், இங்கே யாரும் எதிர்பாராத டிவிஸ்ட் ஒன்றை வைத்து திரைப்படம் பார்க்க வந்த அனைவரையும் அதிரச்செய்தவிதம் அருமை.
- மொத்தத்தில் கலாச்சாரா சீரழிவை விளக்கும் அருமையான பெண் ரவுடிகளுக்கான திரைப்படம்.
- எனவே, குடும்பபாங்கான தமிழ்ப்பெண்கள் தயவுசெய்து இந்தப்படத்தை பார்க்காது இருக்க இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.