திரௌபதி

நாடெங்கும் ஒரே பேச்சு இந்த படத்துக்கு போகாதீங்க சாதீய திரைப்படம் என குரல்கள் ஒலித்தது.  நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை கிடைத்த சிறிய ஓய்வில் இந்தப்படத்தைப் பார்த்துவிடலாம் என ஒரு சிறிய நகரில் புதிதாக புதுப்பிக்கப்ட்ட திரையரங்கில் காண வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்தே கதாநாயகன், யாரையோ போட்டுத்தள்ள பிளான் செய்து நகருக்கு வந்து நண்பனுடன் தங்கி வஞ்சம் தீர்க்க வேண்டி சைக்கிளில் டீ விற்பவராக உலா வருகிறார்.

கதை இதுதான், விழப்புரம அருகில் இயற்கை கொஞ்சும் கிராமம் மற்றும் ஒற்றுமையான கிராம மக்கள் வசிக்கும் சேந்தமங்கலம் கிராமத்தில் ஒருவரை ஏமாற்றி தண்ணீர் நிரப்பும் பாக்டரியை சென்னையை சேர்ந்த தாதாவும் அவன் கூட்டாளியான ஒரு ரவடி வக்கீலும் நடத்துகிறார்கள், இதனை திரௌபதி என்னும் ஒரு தைரியமான காலத்திற்கேற் யூடியூப், பேஸ்புக் என அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் துணிச்சலான பெண் கிராமத்தலைவரின் தம்பி மகள் அவருடைய கணவர் (குஸ்தி) வாத்தயார்.

ஊர்ப்பஞ்சாயத்தில் தாதாவையும், ரவுடி வக்கீலையும் அவமானப்படுத்தி ஊர் ஒற்றுமையை நிலைநிறுத்தும், கிராமத்தலைவரை பழிவாங்க வேண்டி கல்லூரியில் படிக்கும் அவரது மகளை போலியான காதல் வலையில் சிக்க வைக்க பிளான் செட்டப் செய்து ஆளை அனுப்புகிறார்கள்.   காலம் கடந்தும் அந்த பெண் காதல் வலையில் சிக்காதாதால், தாதா குரூப் தந்திரமாக யோசித்து, சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலத்தில் (பெண்ணே இல்லாமல் போலியான ஆளை வைத்து) போலி ஆவணங்களுடன் எக்கசக்கமான லஞ்சம் கொடுத்து திருமணம் நடைபெற்றது போல் செட்டப்செய்து போலி ஆவணம் தயார் செய்து விடுகிறார்கள்.

குறிப்பிட்ட நாளில் கல்லூரி செல்லும், ஊர்த்தலைவரின் மகள் லஷ்மியை தோழியரின் உதவியுடன் 3 மணிநேரம் செல் போனை ஆப் செய்ய தந்திரமாக நாடகமாடி திரைப்படத்திற்கு சென்றவர்களை.  ஊரைவிட்டு ஓடிவிட்டதாக பொய் வதந்தியை பரப்பியும், பொய்யான திருமணப்பதிவு நகலைக் காட்டியம் அவருடைய மன உறுதியைக்குலைத்து தற்கொலை செய்து கொள்ள செய்து விடுகிறார்கள். பின்னர், தந்திரமாக போலியான மாப்பிள்ளையை வைத்தே

காவலுக்கு இருக்கும் கதாநாயகனை தற்காலிகமாகப் பிரித்து, லட்சுமி மற்றும் திரௌபதியையும் கொல்லுகிறார்கள்.    இதனை லஞ்சம் கொடுத்து காவல் துறையை திசைதிருப்பி திரௌபதி கணவனையும் கைது செய்கிறார்கள்.

சிறிது காலம் கழித்து, பெயிலில் வந்த திரௌபதி கதாநாயகன் (கணவண்) இந்த கொடுமைக்கு காரணமான தாதா, வக்கீலை போட்டுத்தள்ளவே சென்னை மாறுவேடத்தில் வருகிறார்.

வக்கீலை பின்தொடர்ந்து அப்பாவி பெண் ஒருவரைக் காப்பாற்றியும், அவரது மண்டையைப் பிளந்து அதனை நண்பன் மூலமாக வீடியோ எடுத்து, போலீஸ்க்கு அனுப்ப அதனை சீரியசாக எடுத்து சிறப்பு காவலரை நியமித்து கதாநாயகனை தொடந்து கண்காணிக்க ஆள் அனுப்புகிறது. போலீஸ். இவரை மோப்பம் பிடிக்கும் போலீஸ்க்கு முழுகதையும் தெரியாமல், கதாநாயகனை என்கவுண்டரில் போடப் போகும்பொழுது, திரௌபதியின் நட்பு யூடியூப் பெண் ஒருவரால் திரௌபதி சாகவில்லை என்ற உண்மை தெரியவருகிறது. அதனைத்தொடர்ந்து, பொய்யான 3200 பதிவுகளை மேற்கொண்ட சார்பதிவாளர் பேஸ்புக்கில் லைவ் ஆக தவறை ஒப்புக்கொள்ள வைத்து, விஷம் குடிக்க வைக்கிறார் கதாநாயகன், திரௌபதியின் நட்பு மருத்துவரின் உதவியால் மூளைச்சாவு அடைந்த திரௌபதி அவர் உடலில் வளரும் சிசுவைக் காப்பாற்றி, சாவத்தற்கு முன்னால் திரௌபதி எனது குழந்தை இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்னால் இதற்கு காரணமானவர்களை வேரறுப்பேன் என சபதம் மேற்கொண்டதை அவர் கணவர் நிறைவேற்றுகிறார்.  இதற்கிடையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல் கருணாஸ் தொடரும் பொதுநல வழக்கின் மூலமாக உண்மை வெளிஉலகிற்கு தெரிய வந்தாலும், காவல்துறையும் அரசு வக்கீலும் கடைசிவரை இதனை மறைக்க முயற்சி செய்ய, போலியான திருமணம் நடந்ததை பெண் கேமராவில் பதிவு செய்ததை கோர்ட்டில் ஒப்படைத்து, இனிமேல் பதிவு திருமணங்கள் உரிய சிசிடிவி கேமரா பதிவு இல்லாமல் செய்யக்கூடாது என்றும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அந்தக் காட்சிகளை ஆவணமாக ஏற்றுக்கொள்ள சிறப்பு சட்டம் இயற்ற உத்தரவு இடப்படுகிறது.

திரைப்படம் காட்சிபடுத்தியிருககும் விதமும், அதனில் நடித்த நடிகர்களும் சும்மா சொல்லக்கூடாது பின்னிப்பிடல் எடுத்திருக்கிறார்கள். 2014ல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தினை அனைத்து பெண்மக்களும் அவசியம் பார்த்து விழிப்புடன் இருக்க நல்ல தருணம் இது.     மேலும், இதில் காண்பிக்கப்படும் தாதா, ரவுடி வக்கீல் போன்றவர்களால் ஏற்படும் பாதிப்புகளால் எத்தனை எத்தனை அப்பாவி மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனரோ.. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிடில், சாதாரணமான மக்களால் நிம்மதியாக வாழ முடியுமா என தெரியவில்லை.    காலம் கலிகாலம்.

முக்கியமான விஷயம் இதில் எந்த இடத்திலும் சாதியைப்பற்றியோ அல்லது சாதிப்படமாக சித்தரித்தத்துள்ளது முழுவதும் அப்பட்டமான பொய்.

முற்றிலும் சாதிக்கலவாவது திரெளபதி திரைப்படம்.