ஒரு தமிழரின் பொங்குதல் … ராஜராஜசோழன்

ஒரு தமிழரின் பொங்குதல் …

HISTORY OF TAMILANS

இதைபடித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் .உங்களுக்கும் அந்த மாதிரி தோன்றினால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் …உலக மக்களின் பார்வை படும்மெரினாவில்அண்ணா சமாதி,எம்ஜிஆர் சமாதி,ஜெயலலிதா சமாதி,கருணாநிதி சமாதியில்,ராமசாமி நாயக்கர் சிலையென்றுஎல்லா எழவும் இருக்குதுஎங்கடா அந்த ராஜராஜ சோழன் சிலை ?எங்கடா போனது என்சூர்யவர்மன் சிலை?எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்?எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்தபாண்டிய மன்னர்கள் நினைவு மண்டபம்.?எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை?எங்கடா இருக்கு என் வேலுநாச்சியார் சிலை ?எங்கதான்டா இருக்கு சேரன் செங்குட்டுவனின் சிலை ?எங்கடா அந்த அழகுமுத்தோடநினைவு மண்டபம்.?எங்கு பார்த்தாலும்அண்ணா அறிவாலயம்அண்ணாநகர்,அண்ணா சாலைஅண்ணா சிலைபெரியார் மண்டபம்பெரியார் பேருந்து நிலையம்பெரியார் சாலை பெரியார் சிலைகலைஞர் கருணாநிதி நகர்.கருணாநிதி சிலை,எம்ஜிஆர் மணிமண்டபம்எம்ஜிஆர் பல்கலைகலகம்எம்ஜிஆர் பேருந்து நிலையம்எம்ஜிஆர் நகர்எம்ஜிஆர் நூலகம்எம்ஜிஆர் சாலைஎம்ஜிஆர் சிலைஅடுத்தால அம்மா, சின்னம்மாபுஜ்ஜிமா,கட்டுமரம்இப்படி சொல்லியே நாசமா போங்கடா!..உலக சாம்ராஜ்யங்களைவென்றுகாட்டிய நம் முன்னோர்களுக்கு சரியானசிலைகளுமில்லை,நினைவு கட்டிடங்களும் இல்லை.அவர்களின் வரலாறும் வகுப்பறைப் பாடத்திட்டத்தில் ஒழுங்காக இல்லைஇடையில் வந்து நம் மதத்தை அழித்து மக்களை மிரட்டி மதம் மாற்றி மறுத்தால் கொன்று குவித்த அத்துணைகழிசடைகளின் வரலாறும்பாடத்திட்டத்தில் ஓங்கி ஒலிக்கிறதே! வெட்கமாக இல்லை!கரிகாலன் கட்டிய கல்லணைஇன்றுவரை சுற்றுலாத் தலமாகமாற்றப்படவில்லை.

மாபெரும் கடற்படையை கட்டமைத்துஉலகின் பல நாடுகளை வென்றுமாபெரும் சோழப் பேரரசை நிறுவியராஜேந்திர சோழனை பற்றிஇங்கே கற்பிக்கப்படவில்லை!ஒவ்வொரு தமிழனும் தினமும் கோவிலுக்கு செல்கிறான்அந்தக் கோவிலைக் கட்டியவன்யாரென்று கூடத் தெரியாமல்அந்தக் கோவிலைக் கட்டியமாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல் இருந்தாலும் கூட அப்பேற்பட்ட அவனது நடுநிலைத்தன்மையைப்பாராட்டி நீ அல்லவாஅவனது பெயரை உலகம் போற்றிட செய்திருக்க வேண்டும்.?ஒன்றுமே செய்யாமல்இருந்துவிட்டாயே நன்றி கெட்டவனே.பசுவுக்காக தன் மகனையேகொன்ற சோழனின் கல்லறையை பாரடா..கஜினி முகமதுவை பதினேழு முறை ஓடவிட்டு விரட்டியநம் ரஜபுதன ராஜாக்களின் நினைவினைப் போற்றடா..தான் கட்டிய கோவிலில் தன் பெயரை எழுதாமல் அதில் வேலை செய்த சிற்பக்கலைஞர்களின் பெயரை எழுதி வைத்த நம் ராஜ ராஜ சோழனின் கல்லறை எங்கே! மணிமண்டபம்தான் எங்கே!?இப்பேர்பட்ட ஒரு மாமன்னனை கேவலம் காசுக்காக சாயம் பூசி கூத்தாடும் கூட்டம் கேள்வி கேக்குது.தெற்காசியாவை ஆண்டஒரு மாமன்னனின் கல்லறையை நீ வைத்திருக்கும் கோலத்தைப் பாரடா !மானங்கெட்ட தமிழனே.அப்படி என்னாடா இந்த இடையில் வந்த கொள்ளையர்கள்உனக்கு செய்துவிட்டனர் ?இடையில் வந்த ரெண்டு நல்ல மனுஷன் கக்கனும்,காமராஜரும்.கக்கன் யாரென்று யாருக்குமே தெரியாது.காமராஜரை சாதி சங்க தலைவராய் மாற்றி வைத்துவிட்டாய்.ஐய்யா முத்துராமலிங்கத் தேவரை சாதிதலைவராய் மாற்றி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.மாகராஷ்ட்ராவில் எத்தனையோதலைவர்கள் ஆண்டாலும் இன்றும், முதல் மரியாதை சத்திரபதி சிவாஜிக்குத்தான்.அந்த மான உணர்வு உனக்கு ஏனடா இல்லாமல் போனதுதமிழனே..!விழித்திடு தமிழா : போதும் இந்த மாயை1.ஈவேரா சாதியை ஒழித்தார்…அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்….2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்…டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி…3.ஈவேரா ராமரை ஒழித்தார் …உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது…4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் …மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு …5.ஈவெரா சமுகநீதி காத்தார்….90 மார்க் எடுத்தவன் வீதியில் பிச்சைகாரனாய் ..35 மார்க் எடுத்தவன் ஏசி ரூமில் ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..ஆக மொத்தத்தில் ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே…!!! கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது,மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது,கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது,தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது,கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது, ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாதுதன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாதுஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாதுஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாதுஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாதுமுதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் புலிதேவனை தெரியாது மற்றும் அழகுமுத்துகோனை தெரியாது, பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம் தெரியாதுஇவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,எதுவுமே செய்யாத பெரியார் என்கிற பிரிவினைவாதியை மட்டுமே தெரிய வைத்தது தான். இந்த வெட்கம் கெட்ட திராவிட கொள்கை…

நன்றி. திரு. ராஜன், தினமலரின் வாசகர் பதில் அளித்தலில்

க/பெ ரணசிங்கம்… திரைப்பார்வை

வாழ்க வளமுடன்,  நீண்ட இடைவெளிக்குப்பிறகு குரோணாவால், சின்னத்திரையிலேயே ஒரு திரைப்படத்தைப் பார்க்க டெக்னாலஜி நம்மை உந்தித்தள்ளிவிட்டது.   முதலில் இந்தப்படத்தை வாங்கி வெளியிடும் ஜி டிவி குரூப்பிற்கு நன்றி சொல்வோம்.  ஏனெனில், இதன் வெற்றியைப்பெறுத்தே பலத் திரைப்படங்கள் இதேபோல் நமக்கு காட்சிக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

இராமநாதபுரம், தண்ணீர் இல்லாத வறண்ட நிலம்தான் கதைக்களம்.   அப்பாடியோ, ஏசி ரூமில்உட்கார்ந்து சொகுசாக திரியும் நமக்கு, இந்தத் திரைப்படம் நெற்றியில் அடித்ததுபோல் எதார்த்தை அப்படியே உரித்து வைத்துள்ளது.  

  1. ரணசிங்கம் இளைஞர் (விஜய்சேதுபதி,அவருடைய மணிமகுடத்தில் இந்தப்படமும் ஒரு சிறகு, இயற்கையான நடிப்புக்கு சொந்தக்காரர்) அநியாயத்தை தட்டிக்கேட்கும் பொறுப்புள்ள குடிமகன் மற்றும் நிலத்தில் நீரோட்டம் பார்க்கும் திறமைசாலி.
  2. ஒரு முறை நீரோட்டம்பார்க்கும்பொழுது சுட்டி இளைஞி ஐஸ்வர்யா ராஜேஷ் யிடம் மோதல் ஏற்பட்டு காதாலாகவும் பின்னர், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டு, திருமணம் நடைபெறும் நாளில் 144 தடை இருப்பதால், இரகசியமாக இரவில் சொற்ப சொந்தங்களுடன் திருமணம் முடிகிறது. (முதற்படம் காக்கா முட்டையில் ஸ்கோர் செய்ததை விட இந்தப் படத்தில் 200 விழுக்காடு எதார்த்தானமான நடிப்பை வெளிப்படுததி இருக்கிறார்.
  3. குடிநீருக்காக வீட்டுக்கு வீடு 4 பிளாஸ்டிக் குடம் ஏந்திய தள்ளுவண்டியில் நீர்கிடைக்கும் இடத்தில் இரவு பகல் பாராமல் பெண்களால் மட்டுமே சென்று நீர்பிடித்து வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள்.   (பகீர்)
  4. பி. விருமாண்டியால் இயக்கப்பட்டுள்ள இந்தத்திரைப்படத்தை அவசியம் நாம் காணவேண்டும்.  ( ரூ.199 மட்டுமே)
  5. அச்சர சுத்தமான இராமநாதபுர உட்கடை கிராமத்தினை கண் முன்னால் கொண்டு வந்தமைக்கும், இறந்தவர்களுக்கான கிராம சடங்குகளை முன்னெடுத்து செய்வதை காட்சிபடுததியத்தற்கு நன்றி.
  6. கதை இதுதான். பொருளாதார நெருக்கடியால், ரணசிங்கம் துபாய்க்கு வேலைக்கு சென்றுவிட,  குழந்தைக்கு காதுகுத்தும் நாளில், ரணசிங்கம் இறந்துவிட்டார் என தகவல்வர அதன்பின் அவர் மனைவி படும்பாடு நமது அரசாங்கம் /  கோர்ட் / அரசியல்வாதிகள் / வக்கீல் / மாநில அரசு / மைய அரசு என தட்டும் கதவுகள் எல்லாம் அசட்டையாகவும் பொறுப்பைத் தட்டிக் கழித்து  ( மாவட்ட ஆட்சியர், தாசில்தார், விஏஓ, பதிவாளர், தலைமைச்செயலக முதல்வர் அலுவலகம், எழிலகம்,  மையஅரசின் பாஸ்போர்ட் வெளிவிவகாரத்துறை அலுவலகம் என எவருமே சலிக்காமல் பொய்யான வாக்குறுதி அளித்து காலதாமதம் ஏற்படுத்தி ரணசிங்கத்தின் பிரேதத்தை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்.  ரேசன் கார்டு கணக்கெடுப்பு, திருமண பதிவாளரின் சேட்டை, (நம் அரசின் செயல்பாடு நம்மையே தலை குணியவைக்கிறது).
  7. இடையில் ஶ்ரீதேவி துபாயில் இறப்பது அதற்காக மொத்த தேசமும் துக்கம் கொண்டாடுவதும், உடனடியாக அவர் பிரேதத்தை வரவழைப்பது ( காசு இருந்தால் இந்த நாட்டில் இராஜா இல்லையென்றால் கூஜா தான் என்பதனை கண்ணத்தில் அடித்துக் கூறியிருபபது) வாவ்.
  8. அரபு நாட்டின், அதிகாரிகளும் மெத்தனமாக இருப்பதும், வெறும் இன்சூரன்ஸ் வேண்டுமானால் அனுப்பிவைக்கிறோம் என்று தகவல் கொடுப்பதும், அதில் காம்பரமைஸ் ஆகாமால், எனக்கு என் கணவரோட சடலம்தான் வேண்டும் என உறுதியாக நிற்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன்.
  9. இந்தப்படத்தில் ஒரு மாவட்ட ஆட்சியரே எவ்வாறு பொய்யான வாக்குறுதி தந்து பிரச்சினைகளை தள்ளிப்போடுவதும், தாசில்தாரே, மாவட்ட ஆட்சியரை தறக்குறைவாக நேரிடையாகவே பேசுவதும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.   
  10. ஆட்சியராக தினந்தந்தி பாண்டே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
  11. அனைத்து துனை நடிகர்களும், ( மத்திய அமைச்சர் ஒருவர், பிரதமர் வேடம் மோடி உள்பட) மெச்சும்படியாக நடித்திருப்பது இந்தப்படத்தின் பிளஸ் பாயிண்ட்
  12. கிளைமாக்ஸ் சூப்பர்.     படம் முடிந்தவுடன்தான் டிவிஸ்ட்.

அவசியம் தவறவிடாமல் பார்க்கப்பட வேண்டிய படம்.    அனைத்து கலைஞர்களும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள். இசை, தண்ணியில்லாத காட்டை காட்டும் கேமராவின் கண்கள். 

(பின்குறிப்பு) சிவபார்கவி நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிளாக் எழுத திரும்பியுள்ளார்.   ஆதரவிற்கு நன்றி.  குறையிருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.