வாழ்க வளமுடன், நீண்ட இடைவெளிக்குப்பிறகு குரோணாவால், சின்னத்திரையிலேயே ஒரு திரைப்படத்தைப் பார்க்க டெக்னாலஜி நம்மை உந்தித்தள்ளிவிட்டது. முதலில் இந்தப்படத்தை வாங்கி வெளியிடும் ஜி டிவி குரூப்பிற்கு நன்றி சொல்வோம். ஏனெனில், இதன் வெற்றியைப்பெறுத்தே பலத் திரைப்படங்கள் இதேபோல் நமக்கு காட்சிக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

இராமநாதபுரம், தண்ணீர் இல்லாத வறண்ட நிலம்தான் கதைக்களம். அப்பாடியோ, ஏசி ரூமில்உட்கார்ந்து சொகுசாக திரியும் நமக்கு, இந்தத் திரைப்படம் நெற்றியில் அடித்ததுபோல் எதார்த்தை அப்படியே உரித்து வைத்துள்ளது.
- ரணசிங்கம் இளைஞர் (விஜய்சேதுபதி,அவருடைய மணிமகுடத்தில் இந்தப்படமும் ஒரு சிறகு, இயற்கையான நடிப்புக்கு சொந்தக்காரர்) அநியாயத்தை தட்டிக்கேட்கும் பொறுப்புள்ள குடிமகன் மற்றும் நிலத்தில் நீரோட்டம் பார்க்கும் திறமைசாலி.
- ஒரு முறை நீரோட்டம்பார்க்கும்பொழுது சுட்டி இளைஞி ஐஸ்வர்யா ராஜேஷ் யிடம் மோதல் ஏற்பட்டு காதாலாகவும் பின்னர், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டு, திருமணம் நடைபெறும் நாளில் 144 தடை இருப்பதால், இரகசியமாக இரவில் சொற்ப சொந்தங்களுடன் திருமணம் முடிகிறது. (முதற்படம் காக்கா முட்டையில் ஸ்கோர் செய்ததை விட இந்தப் படத்தில் 200 விழுக்காடு எதார்த்தானமான நடிப்பை வெளிப்படுததி இருக்கிறார்.
- குடிநீருக்காக வீட்டுக்கு வீடு 4 பிளாஸ்டிக் குடம் ஏந்திய தள்ளுவண்டியில் நீர்கிடைக்கும் இடத்தில் இரவு பகல் பாராமல் பெண்களால் மட்டுமே சென்று நீர்பிடித்து வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள். (பகீர்)
- பி. விருமாண்டியால் இயக்கப்பட்டுள்ள இந்தத்திரைப்படத்தை அவசியம் நாம் காணவேண்டும். ( ரூ.199 மட்டுமே)
- அச்சர சுத்தமான இராமநாதபுர உட்கடை கிராமத்தினை கண் முன்னால் கொண்டு வந்தமைக்கும், இறந்தவர்களுக்கான கிராம சடங்குகளை முன்னெடுத்து செய்வதை காட்சிபடுததியத்தற்கு நன்றி.
- கதை இதுதான். பொருளாதார நெருக்கடியால், ரணசிங்கம் துபாய்க்கு வேலைக்கு சென்றுவிட, குழந்தைக்கு காதுகுத்தும் நாளில், ரணசிங்கம் இறந்துவிட்டார் என தகவல்வர அதன்பின் அவர் மனைவி படும்பாடு நமது அரசாங்கம் / கோர்ட் / அரசியல்வாதிகள் / வக்கீல் / மாநில அரசு / மைய அரசு என தட்டும் கதவுகள் எல்லாம் அசட்டையாகவும் பொறுப்பைத் தட்டிக் கழித்து ( மாவட்ட ஆட்சியர், தாசில்தார், விஏஓ, பதிவாளர், தலைமைச்செயலக முதல்வர் அலுவலகம், எழிலகம், மையஅரசின் பாஸ்போர்ட் வெளிவிவகாரத்துறை அலுவலகம் என எவருமே சலிக்காமல் பொய்யான வாக்குறுதி அளித்து காலதாமதம் ஏற்படுத்தி ரணசிங்கத்தின் பிரேதத்தை கிடைக்க விடாமல் செய்கிறார்கள். ரேசன் கார்டு கணக்கெடுப்பு, திருமண பதிவாளரின் சேட்டை, (நம் அரசின் செயல்பாடு நம்மையே தலை குணியவைக்கிறது).
- இடையில் ஶ்ரீதேவி துபாயில் இறப்பது அதற்காக மொத்த தேசமும் துக்கம் கொண்டாடுவதும், உடனடியாக அவர் பிரேதத்தை வரவழைப்பது ( காசு இருந்தால் இந்த நாட்டில் இராஜா இல்லையென்றால் கூஜா தான் என்பதனை கண்ணத்தில் அடித்துக் கூறியிருபபது) வாவ்.
- அரபு நாட்டின், அதிகாரிகளும் மெத்தனமாக இருப்பதும், வெறும் இன்சூரன்ஸ் வேண்டுமானால் அனுப்பிவைக்கிறோம் என்று தகவல் கொடுப்பதும், அதில் காம்பரமைஸ் ஆகாமால், எனக்கு என் கணவரோட சடலம்தான் வேண்டும் என உறுதியாக நிற்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன்.
- இந்தப்படத்தில் ஒரு மாவட்ட ஆட்சியரே எவ்வாறு பொய்யான வாக்குறுதி தந்து பிரச்சினைகளை தள்ளிப்போடுவதும், தாசில்தாரே, மாவட்ட ஆட்சியரை தறக்குறைவாக நேரிடையாகவே பேசுவதும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
- ஆட்சியராக தினந்தந்தி பாண்டே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
- அனைத்து துனை நடிகர்களும், ( மத்திய அமைச்சர் ஒருவர், பிரதமர் வேடம் மோடி உள்பட) மெச்சும்படியாக நடித்திருப்பது இந்தப்படத்தின் பிளஸ் பாயிண்ட்
- கிளைமாக்ஸ் சூப்பர். படம் முடிந்தவுடன்தான் டிவிஸ்ட்.
அவசியம் தவறவிடாமல் பார்க்கப்பட வேண்டிய படம். அனைத்து கலைஞர்களும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள். இசை, தண்ணியில்லாத காட்டை காட்டும் கேமராவின் கண்கள்.
(பின்குறிப்பு) சிவபார்கவி நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிளாக் எழுத திரும்பியுள்ளார். ஆதரவிற்கு நன்றி. குறையிருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.