அன்பார்ந்த் உறவுகளே, பார்வையாளர்களே,
வணக்கம். நமது உறவினர்கள் ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தத் தமிழ்நாட்டை விட்டு மலேசியாவிற்கு சென்று செட்டில் ஆகி அடுத்தடுத்த தலைமுறையினர்கள் தற்சமயம் அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள். நிற்க. திருச்சி.. சேலம் மெயின் சாலையில் இருந்து வடக்கு நோக்கி (சுமார் 7 கிலோமீட்டர் உள்ளடங்கி) , மூவானுர் மார்க்கமாக 3 கிமி முன்னதாக உள்ள கிராமம்தான் கீழக்கண்னுகுளம். அங்கிருந்து 2 கீமி மேற்கில் அமைந்துளளது மேலக்கண்னுகுளம். மிக அழகிய கிராமம்.
தற்சமயம், அந்த கிராமத்தின் முன்னோர்களை நினைத்து, அவர்களுடைய வாரிசுகள் அவ்வப்பொழுது கிராம மக்களுக்கான உடைகள். மளிகை சாமான்கள். அரிசி, பருப்பு போன்றவைகளை தருவித்து அனைவருக்கும் வழங்கி வருகிறார்கள்.
கடந்த 13.04.2021 அன்று திரு. ரகுநாதன் அவர்களின் சார்பாகக் மேலக்கண்னுகுளம் மக்களுக்கு ரூ.1050 மதிப்பிலான அரிசி பருப்பு மற்றும் ரூ,21 மளிகை சாமான்கள் திருச்சியில் புகழ்பெற்ற ஆனந்தா ஸ்டோர்ஸ் என்னும் நிறுவனத்தில் இருந்து வரவழைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வாத்தியார் வீட்டு திரு. துரைராஜ் அவரின் மகன் திரு. தியாகராஜ் அவரின் மகன் திரு. சிவனேஷ் ஆகியோரால் முன்னிருந்து 50 பயனாளருக்கு வழங்கப்பட்டது. அதன் காட்சிப்படங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை என அறியப்படுகிறது.












நன்றி வணக்கம்.. இது போன்ற நிகழ்வுகளை இனித்தொடர்ந்து பதிவு செய்யப்படும்.