ஏன் இந்தப் போராட்டம்..?

ஏன் இந்தப் போராட்டம்..?
Why this Protest ?
காலையில் எழுந்து விடுதியின் கீழ்த்ளம் வழியாக ரோட்டிற்கு சென்றதுதான், எங்கிருந்தோ பறநது வந்த காக்கை ஒன்று தலையில் கொத்திவிட்டு அருகில் இருந்த மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டது. அதற்கு துணையாக, பல காக்கைகளும் சேர்ந்து கொண்டு தொடர்ந்து தாக்க வந்து கொண்டே இருந்தது… அய்யோடா, இது என்ன மாயம் எதுக்காக நம்மை இப்படி டார்கெட் செய்யுது இந்தக்காக்கைகள் அப்படின்னு சிறுதுதொலைவில் உள்ள வழக்கமான டீக்கடையில் டீ அருந்திவிட்டு திரும்பினேன். நான் தங்கியிருக்கும் அறைகளின் நுழைவாயில் அருகே உள்ள
crow-attack_0
பால்கனியில் சிறிதுநேரம் நின்றுகொண்டு சாலையில் செல்லும் வாகனங்களையும், மனிதர்களையும் வேடிக்கை பார்ப்பது வழக்கம். அப்போதுதான் கவனித்தேன், அருகில் இருந்த மரத்தின் கிளைகள் பால்கனியைத் தொட்டுக்கொண்டிருப்பதும், உற்று நோக்குகையில் உள்ளே ஒரு கிளையில் காகம் கூடுகட்டி முட்டைபொரித்து குஞ்சும் பொரித்துள்ளது. நான் இரவு நேரங்களில் பொழுது போகாமல் பால்கனியில் சாய்து கொண்டு வேடிக்கை பார்ப்பது வழக்கம் அதுபோல் முதல்நாள் வேடிக்கைப் பார்த்ததை இந்த காக்கைக்கூட்டம் தனது காக்கைக் குஞ்சுகளுக்கு தீங்கு விளைவிக்க வந்திருக்கிறேனோ என்று அஞ்சிதான் மேலே கண்ட நடவடிக்கையில் காலையில் ஞாபகமாக என்னை (இருட்டில் பார்த்தது எப்படி ஞாபகம் இருக்கிறது பாருங்கள்) குறிவைத்து தாக்கியிருக்கிறது. வீட்டிற்கு போன்செய்து, இந்த விசயத்தை சொன்னால் உடனே, அய்யயோ, சனிஸ்வரனுக்கு உடனே விளக்கு போடுங்கள், திருநள்ளாருக்கு போய்டு வரனும் அப்படின்னு ஆரம்பித்துவிட்டார்கள்.
crow-attack_1
காக்கையே இப்படி போராடுகிறது…

செய்திப்பார்வை…
blogers1
0, இந்தியாவில் 2014ம் வருடம் தூய்மையான நகராம் என்று திருச்சிக்கு 2ம் பரிசாம்… இன்னமும் குப்பைகளினால் நிறைந்தும், ஆடு மாடுகள் சர்வ சாதாரணமாக தெருவில், ரோட்டில் சுற்றி வருவதும், தெருவிற்கு ஒருவர் அல்லது இருவர் ஆடு, மாடுகள் வளர்த்து தெரு முழுதும் சாணிகளால் நிறைத்துவிடுவது நடைபெற்றுதான் வருகிறது.

1, இலங்கையில் ஒருவழியாக ரணில் விக்கிரமசிங்கேயை செயிக்கவைத்து, ராஜபக்ஷேயை ஓரங்கட்டியாகிவிட்டது… இனிமேலாவது அங்கே அமைதி திரும்பி நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும்., எவ்வளவு இரத்தம் சிந்தியிருக்கிறான் ஈழத்தமிழன்…

2. தூய்மை இந்தியா திட்டத்தின் விளம்பரத்திற்காக 92 கோடி செலவானதை விமர்சிக்கிறார்கள். உண்மையில் அதுபோல் விளம்பரம் செய்துமே, தூய்மைப்பற்றி அக்கரையில்லாமல் தான் நடந்துகொள்கிறேர்ம்… இனிமேலாவது ஒவ்வொருவரும் தன்வரைக்கும், தன்குடும்பம், என குப்பைகளை சரியாக கையாண்டு நாட்டிற்கு உதவுவோமே..

3. வழக்கமா குரூட் ஆயில் விலை எறங்கினால், தங்கம் விலையும் எறங்கும். ஆனால், மறுபடியும் தங்கம் 20 ஆயிரத்திற்கு மேல் எகிறிவிட்டது…

4.வாட்ஸ்அப், அருவிபோல் செய்திகளையும் காணக்கிடைக்காத காட்சிகளையும் கொட்டித்தீர்க்கிறது… சமீபத்தில் பார்த்து மகிழ்ந்தது.. பாகுபலியில் வரும் அருவில் போல் இந்தியாவில் ஒரு இடத்தில் மிகப்பிரம்மாண்ட அருவிக் கொட்ட அதனை கடந்து செல்கிறது ஒரு நீண்ட புகைவண்டி…. சமீபத்தில் பார்த்து வெறுத்தது. பெங்களூருவில் இருந்து மைசூர் சென்ற ஒரு குடும்பம் கார்விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறது. அதனை இன்ஞவிடாமல் புகைப்படம் எடுத்து ( உதாரணம் ஒரு 9 வயது பாப்பாவின் தலை தனியாக கிடக்கிறது, உடலை மட்டும் உயிருடன் எஞ்சியவர் மடியில் வைத்து அழுகிறார்) வாட்ஸ்அப்பில் பரவவிட்டுள்ள புண்ணியவானை 1 மணிநேரமாகத் திட்டிக்கொண்டிருக்கிறேன். ( உடனே அனைத்து புகைப்படத்தையும் டெலிட் செய்துவிட்டு)

5.வீட்டு உபயோகத்திற்காக போர்வெல் தோண்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெறவேண்டியது இல்லையாம்…. செய்தித்தாளில் படித்தது.
Tamil Blogs Traffic Ranking

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

ஆரஞ்சு மிட்டாய் …

ஆரஞ்சு மிட்டாய் … Orange Mittai … Tamil film Review

விஜய்சேதுபதியின் அடுத்த இறகு இந்த ஆரஞ்சுமிட்டாய், இந்தப் படத்தை கடைசியில் இருந்து பார்த்தாலும் நடுவில் இருந்து பார்த்தாலும் எதுவுமே புரியாது…முதலில் இருந்து பார்த்தாலும் ஒன்னும் புரியாது… தமிழ்சினிமாவின் இலக்கணத்தை உடைத்து படம் எடுக்க வேண்டும் என்ற இயக்குநரின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஒரே வரியில் புரிதல் வேண்டுமென்றால், ஒரு சுமாரான கிராமத்தின் பணக்காரர், உறவினரின் ஆதரவற்ற நிலையில் அடிக்கடி 108 சர்வீசை அழைத்து நெஞ்சுவலி என்று டவுனில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு டிரிப் அடிக்கிறார். அவ்வாறு ஒருமுறை டிரிப் அடிக்கும்பொழுது, 108 ஆம்புலன்ஸ் அட்டெண்டர் முதியவ்ர்பால் ஈர்க்கப்பட்டு மிக நெருக்கமாக நண்பராகிறார். உண்மையில் பெரியவருக்கு நெஞ்சுலி கடுமையானதா, இல்லையா என்பதே யாருக்கும் தெரியவில்லை.
images
என்ன ஊருசார் இது, வெறும் மேடும் பள்ளமும், பொட்டைக்காடும், பச்சைபசேல் என்ற பேச்சுக்கே இடமில்லை. யாரிந்த கேமராமேன், இவரைவிட மோசமாக படம் பிடிக்க இயலாது. அதுவும் இரவில் நடைபெறும் காட்சிகள் படுமோசம். இசையும் படுசுமார். ஆனால், விஜய்சேதுபதியில் நடிப்பு, உண்மையில் இவர் ஒரு ஜீனியஸ்தான் என்று எண்ணத்தோன்றுகிறது. அப்படியே ஒரு வயதான நோய்வாய்ப்பட்ட வசதியான ஆதரவற்ற முதியவரை உரித்தெடுத்திருக்கிறார்.
orange-Mittai_childhood-do-you-miss-this
மினிமம் பட்ஜெட் படம்தான் ஆனால், அதையும் பார்க்க நம்ம பட்ஜெட் எல்லாம் ஒன்றுதானே, மல்டிபிளக்ஸ் கலாசாரம் வந்தவுடன் திரைப்படம் பார்ப்பதே ஒரு ஆடம்பர கொண்டாட்டம் போல்தான் உள்ளது. முந்தைய படத்தில் ஆர்யாவை காப்பாற்ற அச்சுபிச்சுன்னு விஜய்சேதுபதி எடுக்கும் சிறுபிள்ளை நடவடிக்கைகள் போல் இல்லாமல், இந்தப்படத்தை நன்றாக உணர்ந்து செய்திருப்பது திருப்தி.

நாட்குறிப்புகள்.

0. இந்தப்பதிவு எனது 200வது வேர்ட்ஸ்பிரஸ். பதிவு
1. ஊர் உலகத்தைப்போல், நானும் எனது ஆழ்ந்த இரங்கலை பாரதரத்ணா அப்துல்கலாம் அவர்களுக்கு சமர்ப்பணம். பி.கு. அவர்படித்த அதே புனித வளனார் கல்லூரி, திருச்சியில் படித்தது மகிழ்ச்சி.
2, ஈரோடு, புத்தகத்திருவிழா நிறைவு தினத்தன்று செல்ல முடிந்தது. என்னா கூட்டம்.. அதிலும், ஆங்கிலப்புத்தகங்கள் விற்கும் ஸ்டாலில்
நாம் தேடும் புத்தகங்களை எடுக்க உதவும் சிறிய வகுப்பு படிக்கும் மாணவர்கள். வருங்கால இந்தியா உண்மையில் படித்த, அறிவாளிகள் நிறைந்து இருக்கும் எனத்தெரிகிறது.
3, திரு. உமேஷ், மதுரைக்காரர். இந்திய அளவில் 77வது ரேங்கில் ஐ.ஏ.எஸ். பாஸ்செய்திருக்கிறார்… அவருடைய பதிவினை படிக்க படிக்க உற்சாகம் பொங்குகிறது. அதிலும் இந்தியாவின் முக்கியமான பிரச்சினை … பணக்காரர், ஏழை வித்தியாசம்.. நமது, இந்தியப் பாரம்பரியத்தின் முக்கிய தூணான ச சகோதரத்துவம் குறைந்துவிட்டதைப்பற்றி வருத்தத்துடன் குறிபிட்டிருக்கிறார்..
4, இந்திய சுதந்திரநாள் வழக்கம்போல் ஆகஸ்ட் 15, எவ்வளவு தியாகம்… ஆனால், நாம் இப்போ அதை எப்படி பயன்படுத்துகிறோம்.
5. எங்கும் நீக்கமற நிறைந்திருந்திருக்கும் ஊழல் …

என்ன செய்ய, நானும் உங்களைமாதிரி ஒரு இந்தியப்பிரஜை….
Tamil Blogs Traffic Ranking

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

மாரியும் பாகுபலியும் … திரை விமர்சனம்

மாரியும் பாகுபலியும் … திரை விமர்சனம்
marri and BAGUPALI TAMIL FILM REVIEW..

அட்டகாசமான ஆரம்பம், ஆகாயம் வரைக்கும் நீண்டிருக்கும் மலை அருவியில் இருந்து கொட்டும் நீரில் துரத்திய படையினர், எதிரியிடம் சிக்காமல் மகாராணி தன்கையிலிருக்கும் பிஞ்சுக்குழந்தையை கையில் ஏந்தியவாறே இரவு முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருப்பதும், காட்டுவாசிகளிடம் குழந்தையை ஒப்படைத்து கை தண்ணீருக்குள் மறையும் காட்சியிலிருந்தே இந்த படம் நிச்சயமாக வழக்கமான ஒன்றல்ல என்பதை நிரூபிக்கிறது. வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து, ரசிகர்களை திருப்திபடுத்தும் ராஜமௌலி சாருக்கு ஒரு சல்யூட். பாகுபலி… 25 நாட்களாக பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டாம் (ஏனெனில் ராஜாராணி கதைகள் பிடிக்காததே காரணம்) என்று முடிவு செய்திருந்தேன். ஒரு சிறிய நகராத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், இதை ஆரம்பத்திலேயே பார்க்கமாமல் காலம் தாழ்ந்து விட்டோமே என்று வருந்த வேண்டியிருந்தது.
2
கதை எனக்கு புரிந்த வரையில் மகிழ நாட்டின் அரசன் அவருடைய அண்ணன்(நாசர்), இருவருக்கும் ஆண்குழந்தை பிறக்கிறது. அண்ணன் கை ஊனம் என்பதால், தம்பி ஆட்சி செய்திருக்கிறார். அரசர் (தம்பி) எதிர்பாராமல் மரணமடைய, அவருடைய மனைவி (ரம்யாகிருஷ்ணன்) தர்மசிந்தனை மற்றும் சிறப்பாக அரசாட்சி செய்கிறார். சூழ்ச்சிகளை வேறறுத்து நல்லவிதமாக ஆட்சிசெய்கிறார். இரண்டு குழந்தைகளும் , இவர்களுக்கு பாதுகாப்பாக தளபதி கட்டப்பா ( சத்யராஜ்) வளர்ந்து விடும்பொழுது, கொடூரமாக எதிரி படையெடுக்க அதனை இரண்டு சகோதரர்களும் ஒற்றுமையாக முறியடிக்க, நாசர் மகனை (ராணா) தளபதியாகவும், ரம்யாகிருஷ்ணன் மகனை மன்னாகவும்(பிரபாஸ்) அறிவிக்க, இருவருக்குள்ளும் பொறாமை மற்றும் குரோதம் வளர்கிறது. பிரபாஸ் எதிர்பாரதவிதமாக கொல்லப்பட, மீண்டும் முதல் காட்சியை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
1
காட்சிகள் ஒன்றுக்கொண்று முன்னும் பின்னுமாக இருந்தாலும் அருமையாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். பொங்கிவரும் அருவியின் மேலே ஏறே இளைய பிரபாஸ் முடிவு செய்து முயற்சி செய்து வெற்றி அடைவதும், தமண்ணா தீவிரவாதிகள் கூட்டத்தில் பொங்குவதும் இளைய பிரபாஸ் காதல் வலையில் விழுவதும் மிகவும் சுவாரசியம்… அப்பா, செம பிரமாண்டம், எவ்வளவு உயரம் முடியுமோ, அவ்வளவு உயரத்திற்கு சிலைகள் படத்தில் காண்பிக்கப்படுகிறது. போர் காட்சிகள் உண்மையில் இவ்வளவு த்ருபமாக இதுவரை அமைந்ததில்லை. பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இசையும், அவ்வப்பொழுது, பொங்கிப் பிரவாகும் தமிழ்ப்பாடல்களும் புரியலை என்றாலும் தாலாட்டுகிறது. அந்த கால அரசர்கள், தளபதிகள், ஒற்றர்கள், திருடர்கள், வீரர்கள், போர், இராஜபரம்பரை, துரோகிகளை பழிவாங்குதல் என பல்வேறு கிளைகளில் கதைக்களம் பிரிகிறது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
4
பின்குறிப்பு. போனவாரம் மாரி திரைப்படம் பார்க்க சென்றிருந்தபொழுது, விழுந்த உரையாடல், ஒரு லாரி டிரைவர் படம் பார்க்க வந்திருந்தார். அவர் பாகுபலியை ஒரு சிறிய ஊரில் பார்த்தாராம். தற்சமயம் மாரி படத்தைப் பார்த்தற்கு மீண்டும் ஒருமுறை பாகுபலி பார்த்திருக்கலாம் என்று அருகிலிருந்தவர்களிட்ம் தெரிவித்தார். மாரி படத்தைப்பற்றி பலரும இணையத்தில் கழுவி ஊற்றி இருந்தாலும், வாட்ஸ்அப்பில் சிறுகுழந்தைகளை வைத்து 3 நிமிட படமாக உல்டா அடித்திருந்தாலும், அந்தபடத்தின் தீம் புறா பந்தயம்… ஆனால் அதை மட்டும் ( சேவல் சண்டையைப்போல ) டெவலப் செய்யாமல் விட்டதே படத்தின் தோல்விக்கு காரணம் என நினைக்கிறேன்.

மணியான ரத்தினம்…ஓ காதல் கண்மணி … இளமைத்திருவிழா

மணியான ரத்தினம்…ஓ காதல் கண்மணி … இளமைத்திருவிழா
Oh kadhal kanmani Tamil Film review

அந்த வருடம் 1988, இப்பொழுதுள்ள பல இளைஞர்கள் (ஆண்/பெண்) அப்பொழுது பிறந்திருக்கவே மாட்டார்கள்.. அப்பொழுது தூர்தர்ஷன் மட்டும்தான், வெள்ளிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளியும் ஒலியும் திரைப்பாடல்கள் ஒளிபரப்புவார்கள்.. அந்த தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை முதல் பாடலே, அந்திமழை சாயும் … என்னும் நாயகன் பட பாடல், மழையில் நனைந்து கொண்டு கமலும், சரண்யாவும் குதுகலமாக கொண்டாடும் பாடலை பார்த்த எங்களுக்கு ஏற்பட்ட பரவசத்திற்கு அளவே இல்லை. இப்பொழுது நினைத்தாலும் அந்த பரவச நிலை ஏற்படுகிறது. பல பல சறுக்கல்களுக்கு பின்னால், இளமையை மீண்டும் கொப்பளிக்க வைக்கும் அலைபாயுதே டிரண்ட் செட்டிற்கு பிறகு இப்பொழுதுதான் நமக்கு ஓ காதல் கண்மணியை மணிரத்தினம் கொடுத்திருக்கிறார்.
t1
தி கிரேட் மணி…. ஒவ்வொரு காட்சியும் இயல்பாக லாஜிக் உதறல் இல்லாமல், இயற்கையாக, பல வண்ணங்களாக, வசனங்கள் நறுக்குத் தெறித்தால் போல் ( படத்தின் கான்செப்ட் தப்பாக பலருக்கு புரிந்துகொண்டு இணையத்தில் கிழிகிழியெனக்கிழிக்கிறார்கள்.) உண்மையில், மும்மையை இவ்வளவு மென்மையாக, இளமையாக, அனைவரும் இடமாக ( நமக்கு தெரிந்ததெல்லாம் மும்பை என்றால் வெடிகுண்டு, தாதா சண்டை சச்ரவு, குடிசைவாசிகள் பிரச்சினைகள் ) கிளாசிக்கலாக படம்பிடித்து காண்பிக்கிறார். படத்தைபார்க்கும் இளைஞர்கள் கூட்டம் ஆரவாரம் எழுப்பி வரவேற்ப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.
மும்மை 2.0 கேம் தயாரிக்கும் கதாநாயகன், பாரீஸ் சென்று கட்டிடக்கலை பயில விரும்பும் இளம்பெண் தற்செயலாக இருவரும் சந்திக்க ஒரு ஈர்ப்பு தொடர்ந்து, நாயகி செல்லும் இடமெல்லாம், நாயகனும் செல்ல, இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகி சந்தர்ப்பம் கிடைத்த காரணத்தால் படுக்கைவரை எந்தஒரு மனப்பயம் இல்லாமலும் தொடர்கிறது. நாளைடைவில், கதாநாயகனும், கதாநாயகியும் ஒன்றாக சேர்ந்தே வாழ விருப்பப்பட்டு அப்படியே வாழ்ந்து வருகிறார்கள். இருவரும், தங்களது இலக்கை நோக்கி பிரிய நேரும் சந்தர்ப்பம் அமையும் பொழுது, கதாநாயகனும் கதாநாயகியும் தாங்கள் விரும்பாத கல்யாணத்தைப் பண்ணிக்கொள்கிறார்கள். இடையில் பிரகாஷ்ராஜ், பவானி என்னும் அவரது ஓல்ட் மனைவி, கதாநாயகனின் அண்ணன் அண்ணி, கதாநாயகனின் அம்மா ( அப்பப்பா அப்படியே பெரியபணக்காரர்களின் பாடி லாங்வேஜ் ) என ஒருசில காரக்டர்களும் நம்மை பரவசப்படுத்துகிறார்கள்.
t2
காந்தி ஆசிரமம், குஜராத், அகமதாபாத், மும்பை என சிறப்பான படப்பிடிப்பு… நடிப்பு ஆகா.. நாயகனும் நாயகியும் போட்டிபோட்டுக்கொண்டு இயல்பாகவே இளமையை கேமிரா முன்னால் வெளிப்படுத்துகிறார்கள். இசை சூப்பர்.. காட்சிக்கு காட்சி பிண்ணனி இசை தூள் பரத்துகிறது. இளைஞர்கள் தவறவிடாத படம்… கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்கவும்… படத்தின் கான்செப்ட்டை மனதில் கொள்ளாமல்… படத்தின் போக்கை ரசிக்கவும் கற்றுக்கொள்ளவும்….

அன்புடன்
சிவபார்க்கி
பின்குறிப்பு .. சிறிது காலம் உடல்நலக்குறைவால் இந்த பகுதியை புதுப்பிக்க இயலவில்லை… தெடர்ந்த உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி.
Tamil Blogs Traffic Ranking

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்
yennai arinthal … tamil film review

படம் தொடங்குவது துபாயில்… (ஏர்போட்டில்) இதைத்பற்றி கதைப்பாரவில் தருகிறேன். ரொம்ப நாளைக்ப்புறம் தல படத்தை பார்க்க ஆர்வத்துடன் சென்றிருந்தோம்…
aa2
ஆரம்பம் 15 நிமிடம் அறுவைதான்… பிளைட்டில் வாந்தியெடுக்கும் அனுஷ்கா …கதை பழைய கதைதான்.. ரௌடிபோல் நடித்து ரௌடிகளிடம் நட்பாகி, பின் அவர்களை போட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரி வேடம் அஜித்துக்கு, பிளாஷ்பேக்கில் அவங்க அப்பா நாசரை ரவுடிகள் போட்டுத்தள்ள, மூன்றுமுகம் ரஜினியின் நடிப்பைப்பார்த்து போலிஸ் அதிகாரி ஆகிறார். எக்குதப்பாக ஆஷிஸ் வித்யார்த்தியிடம் விளையாட தான் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் (திரிஷா ) கன்று மற்றும் பசு ( அதாங்க திரிஷாவிற்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பெண்குழந்தையுடன் விவாகரத்து செய்து இருப்பவர்) என கூடித்திரிகிறார் அஜித்… இடையில் திரிஷாவை போட்டுத்தள்ள, போலிஸ் வேலையை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு கன்றுடன் ஊர்சுற்ற கிளம்பிவிடுகிறார்.. திரும்பி வந்தவுடன், போலிஸ்நண்பரின் சிறுவயது மகளை காணாமல் போவதை கண்டுபிடிக்க கேட்டுக்கொள்ள, கன்றும் அனுமதி அளிக்க மீண்டும் பார்ம்க்கு வருகிறார் அஜித். அப்பொழுதுதான் இதயம் தேவைப்படுபவர்களுக்கு சப்ளை செய்யவென சிறுமிகளை கடத்தி கொல்லும் கும்பலை அடையாளம் காண்பதும், அதற்கு தலைவனாக தான் ஏற்கனவே ரௌடிகளிடம் பழகும் போது தோழனாக இருந்த அருண்விஜய் என்பதனை அறிகிறார். கூடுதலாக, துபாயில் இருந்து வரும் அனுஷ்காவை கடத்தவும் திட்டமிட்டிருப்பது தெரியவந்து, அனுஷ்காவை காப்பாற்றவே படத்தின் முதற்காட்சி துபாயில் இருந்து கூடவே பாதுகாப்பாக வருகிறார். ஆனால், இதைப்பற்றி எதுவும் தெரியாத அனுஷ்கா அஜித்தை (உலகிலேயே மிக அழகான ஆண் ?) என ஜொள்ளு விட்டு சுற்றிசுற்றி வருகிறார். அஜித்தின் கன்றையும் கடத்தி பிளாக்மெயில் செல்லும் வில்லன், தொடந்து வருவதற்கு ஜிபிஎஸ் கருவி என போலிஸ் பிரதானங்களுடன் பிற்பாகு மிக மிக விறுவிறுப்பாக சென்றாலும், முதற்பாதி எப்படா முடியும் என காத்திருக்கிறது விசிலடிச்சான் குஞ்சுகள் ( ரசிகர்கள்) பிறகு மனித உறுப்புகளுக்காக கடத்தும் கும்பலுக்கும் அஜித்துக்கும் சேஸ் நடக்க, முடிவில் எல்லாம் சுபம்..
aa3
கௌதம் மேனன் குறைஞ்ச செலவில் எடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும் சுமார் 10/15 காட்சிக்கான இடங்களே திரும்பிதிரும்பி வருகிறது. எவ்வளவோ கதைகள் இருக்க, தமிழ்சினிமாவை தூக்கி நிறுத்தும் புதுமுயற்சிகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்க, புகழ்பெற்ற இயக்குனர் தேர்தெடுத்திருப்பதோ பழைய பழிவாங்கும் கதை அதுவும் 10 தமிழ் சினிமாக்களின் கதையை மிக்ஸியில் போட்டு அரைத்து கொடுத்திருக்கிறார். இசையும் சுமார்தான்… படப்பிடிப்புகள் பெரும்பாலும் இரவில் வைத்திருக்கிறார்கள். ஒரே இருட்டுக் காட்சிகள்தான் அதிகம். எனினும், அஜித் இளமையாகவும், தெர்ந்தி, நரை முடி என இருவேடங்களிலும், சண்டை காட்சிகளிலும் சோபித்திருக்கிறார்.
என்னை அறிந்தால்… என்னை அறிந்தால் உலகத்தில் போராடாலாம்.. என பாடல்வரிதான் நினைவுக்கு வருகிறது படம் பார்த்தவுடன்.
Tamil Blogs Traffic Ranking
Thenkoodu

டார்லிங் … திரை விமர்சனம்

டார்லிங் … திரை விமர்சனம்
Darling Tamil Film Review
பொங்கல் லீவில் ஏதாவது ஒரு படத்தையாவது பார்த்தாகனும் என்னும் எழுதப்படாத விதிகளில் ஒன்றை நிறைவேற்ற குடும்ப சகிதமாக டார்லிங்க்கு ( அப்பத்தான் பேய் பயம் குழந்தைகளுக்கு போக்கனும்ட்டு, ஆனால் உண்மையில் இந்தப்படத்தால் குழந்தைகள் கற்றுக்கொண்டது என்ன என்பதை கடைசி வரிகளில் சொல்கிறேன் ).
போய் சேர்ந்தோம். இசை அமைப்பாளர் ஜி.வி கதாநாயகனாகவும், வடக்கத்தி கதாநாயகி இறக்குமதி செய்யப்பட்டு பேயாகவும், கதாநாயகியாகவும் டூயல் நடிப்பில் கலக்க, கதை இதுதான்..
c1
கதைக்காக ரொம்ப சிரமப்படவில்லை, நாம் காலம்காலமாக பார்த்து வந்த தமிழ்சினிமாவில் இருந்தே சுடப்பட்டுள்ளது. அதாவது, கற்பழிக்கப்ப்ட்ட பெண்ணின் அண்ணனோ, காதலனோ, யாரோ ஒருவர் வில்லன்களை பழிவாங்குவதுதான்… இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு பதிலாக பேய் அந்த வேலையைச் செய்கிறது.
ஒரு இளம் ஜோடி ( காதலர்கள் ? ) ஈஸ்ட்கோஸ்ட் ரோட்டில் உள்ள கடற்கரை பங்களாவிற்கு செல்லும்பொழுது 5 பொறுக்கிகளால் காதலனின் முன்னால் கதறகதற கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.. சிறிது காலம் கழித்து, ஜிவி, அவரது நண்பர் ( சிரிப்பு நடிகர், பர்மான்மென்ஸ் பிரமாதம் ), அவரது ஒருதலை காதலி என மூவரும் தற்கொலை செய்துகொள்வதற்காக அந்த பங்களாவிற்கு வருகிறார்கள் இதற்கிடையில் கருணாஸ் இந்தக்கூட்டத்தில் இணைந்துகொள்கிறார். வாட்ச்மேன் எச்சரித்தும், வேலைக்காரன் பயமுறுத்தும் செயலில் ஈடுபட்டும், கங்கம்மா கணக்காக ஒரு பெண் சுடுகாட்டில் இவர்களின் வருகையை முறியடிக்க பூஜை செய்தும், இந்த நால்வர் அணி ஜாலியாக பங்களாவில் தங்குகிறார்கள்.. தற்கொலை செய்துகொள்ள நாட்களை தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கிறார்கள்… இடையில் ஒருதலையாக காதலித்த காதலியின் ஏக்கத்திற்கு பழியான ஜிவி(கதாநாயகன்) இரவு 12.00 மணிக்கு காதலிக்கு முத்தம் கொடுக்க அறைக்கு போகும்பொழுது பேய் காதலியின் உடலுக்குள் புகுந்து கொண்டு ஜிவியை துவைத்து எடுக்கிறது. இப்படியாக படம் முழுவதும், பேயுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஏற்கனவே காதலித்தவர்களை திட்டமிட்டு வரவழைத்து பேய் கையாலயே கொல்லவைத்து, கதாநாயகியின் உடலிலிருந்து பேயை விரட்டிவிட்டு, நம்மையும் தியேட்டரைவிட்டு விரட்டுகிறார்கள்…
c2
படம் முழுக்க பேய் இருக்கிறதோ இல்லையோ, நல்லா சிரிப்பு வருது… பேய்க்கு வித்தியாசமான கெட்டப்பல்லாம் கிடையாது சும்மா பவுடர் அடித்து மின்னல் போல் கோடு போட்டாலே போதும்ன்னு முடிச்சுட்டாங்க, கதாநாயகி நல்லா வாட்டசாட்டமாக இருப்பதே பேய் கெட்டப்புக்கு ஒரு பிளஸ்.. கருணாஸ், பல சீன்களில் எரிச்சல் மூட்டினாலும், ஜீவியின் நண்பர் எப்பொழுதும் கிச்சுகிச்சு மூட்ட தவறவில்லை…
நல்ல எண்டர்டெய்ண்மெண்ட்…. குழந்தைகள் பேயைப்பற்றி அறிந்து கொண்டதைவிட விடலைக்காதலைப்பற்றி விலாவாரியாக அறிந்து கொள்ள இந்தப்படம் ரொம் உதவியது.
Tamil Blogs Traffic Ranking
Thenkoodu
World Tamil Blog Aggregator

என் அப்பா எப்பொழுதும் எனது செல்லம்…

என் அப்பா எப்பொழுதும் எனது செல்லம்…
Dad is always great ….

இப்பதிவு வா. மணிகண்டன் அவர்கள் அறிவித்த உங்களைக் கவர்ந்தவரைப்பற்றிய பதிவுகளில்

மசால் தோசை 38 ரூபாய்

  புத்தக வெளியீட்டிற்கான பரிசிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை மகிழ்க்சியுடன் தெரிவிக்கிறேன்.
  http://www.facebook.com/vaa.manikandan
  http://www.nisaptham.com/
  பார்க்க…
  …………………………………………………………………………………………………………
  வழக்கமா எல்லாரும் அம்மாவிற்கே ஓட்டு போடூவார்கள்… அப்பாவின் மீது கரிசனம் இருந்தாலும், நெக்ஸ்ட் டூ மதர் என்ற ரீதியில் தான் கவனம் இருக்கும். என்னைப்பொருத்தவரையில் எனது முதல் கவனம் அனைத்தும் அப்பாவிற்கே சேரும்… ஏன்.. எப்படி? சிம்பிள்… அம்மாவிற்கு நேரமில்லை என்ற ரீதியில் எப்பொழுதும் கவனம் இல்லாமல் தனது பணியைப் பற்றியே சிந்தனை கொண்டு பிள்ளைகளை ஒதுக்கி பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓடிக்கொண்டே இருந்ததுதான். எத்தனையே மாலை நேரங்களில் பள்ளிவிட்டு வந்தும் வெறுமையான வீட்டை யாருமில்லாத வீட்டின் கதவைத்திறந்து தானே இருப்பதை கொட்டிக்கொள்ளும் பழக்கம், அடுத்த வீட்டில், அன்புடன் மாலைப்பொழுதில் அம்மாவின் கைவண்ணத்துடன் செய்துதரும் சிற்றுண்டிக்கு மணம் ஏங்குகையில், ஓரளவிற்கு மனதை அறிந்தவாறாக, அப்பா ஆபந்பாந்தவாறாக வந்து சேர்கிறார் கையில் அய்யர் கடை தோசை, சுவையான சாம்பார் சட்னியுடன்… அப்பப்பர் அந்த தருணங்கள் உண்மையில் தற்சமயம் 5 ஸ்டார் ஓட்டலில் கிடைக்கும் விருந்தைவிட மகிழ்ச்சியை அளித்தது.
  bbb
  சைக்கிள் விட தெரியாத காலத்தில் தைரியமூட்டி, கீழே விழுந்ததாலும் காயங்களுக்கு மருந்துப்போட்டு தெம்பாக சைக்கிளை ஓட்டச் சொல்லி, குரங்குபிடல் போட்டாவது தெருவை மட்டுமல்ல, கடைவீதிக்கும் போய்ட்டுவா ராசா என அனுப்பிவைப்பதில் அப்பாவிற்கு நிகர் அப்பாவே… கூடுமானவரை பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு வந்து விட்டு செல்ல முடியவில்லையென்றாலும், அக்கறையாக பள்ளியில்நடந்ததைப் பற்றி கேட்டறிந்து, வகுப்பு ஆசிரியரை கண்டிப்பாக ஒருமுறையாவது நேரில் சந்தித்து ( இப்பொழுது போல் பேரண்ட்ஸ் மீட்டிங் கட்டாயம் இல்லை அப்பொழுது ) பையனைப்பற்றியும், சேர்மானம் பற்றியும் விசாரித்து வைத்துக்கொள்வார். இருந்தாலும் நாமெல்லாம் மனிதர்கள்தானே, மனம் குரங்குபோல் இஷ்டத்திற்கு யோசித்து… அப்படி இப்படி பசங்களுடன் இணைந்து கட் அடித்துவிட்டு சினிமாவிற்கு செல்வதும், அஜால் குஜால் படங்களுக்கு எப்படியாவது சென்று விடுவ்தும், தெரு அண்ணாக்களுடன் இணைந்து பாட்டீல் துளிகளை முகர்ந்தும், அப்பாவிற்கு அரசல் புரசலாக தெரிந்தாலும், இதெல்லாம் ஆம்பளைகள் வாழ்வில் சகஜம் என்று தானே திருந்திவிடுவான் என நம்பிக்கையுடன் காத்திருந்ததும்… அப்பப்பா….
  aaa
  டூவீலர் ஓட்ட கற்றுக்கொடுத்து பெட்ரோலுடன் வண்டியையும் கொடுத்து, ஊர்சுற்றினாலும் வருத்தப்படாமலும்… விடலைக் காதல் நேரத்தில் கிடைத்த பெண்ணிடம் கடலை போட்டாலும், கண்டும் காணாமலும் இருந்தது அப்பப்பா…. வேலையை நாமே தேடிக்கொள்ள, தேவைப்பட்ட வைராக்கியம் நம்பிக்கையையும் விதைத்ததில் அப்பாவிற்கு வேறொரு டூப் தேவையில்லை. திருமண வயதில், ஓடி ஓடி கடைசியில் நமக்கே நமக்கே பிடித்த பெண்ணை மட்டுமே கட்டிவைத்ததும், பின்னால் பிரச்சினைகள் உருவானபோது வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என விடைத்தாலும், இருபக்கமும் சமரசம் பேசி ஒட்ட வைத்துக் கொண்டே இருந்தது.. குழந்தைகள் பிறந்ததும், அன்புடன், ஆசையுடன் எடுத்து சீராட்டியது… பேரக்குழந்தைக்கு மரணவிளிம்பில் ஏற்பட்ட சோகத்தை தாங்காமல் மருத்துமணை ஐசிக்கு வெளியே குலுங்கி குலுங்கி அழுததும்… இன்றும் இதுபோல் அளவிட முடியாத அன்புடன் ஆண்டவனின் அருளுடன் அப்பாவின் அன்பு தொடர்கிறது….
  … சிவபார்க்கவி
  Tamil Blogs Traffic Ranking
  Thenkoodu
  World Tamil Blog Aggregator

  நன்றி சொல்ல உனக்கு… வார்த்தைகளில்லை எனக்கு

  நன்றி சொல்ல உனக்கு… வார்த்தைகளில்லை எனக்கு
  Thanks a Lot ..My good Viewers..
  3yrs
  இந்த பிளாக் 3 வருடங்களாக 1 லட்சம் பார்வைகளுக்கும் மேல் 115 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆதரவினைத் தெரிவித்தற்கு நன்றி.. சிவபார்க்கவி.
  a1

  Tamil Blogs Traffic Ranking
  More than a Blog Aggregator
  Thiratti.com Tamil Blog Aggregator
  Thenkoodu

  தீபாவளி வாழ்த்துக்கள் … தமிழா தமிழா … நாளும் உனதுநாளே

  தீபாவளி வாழ்த்துக்கள் .. Deepavali Greetings….

  அன்பார்ந்த பிளாகர்களை வளரவைக்கும் தமிழ் நெஞ்சங்களே ( பிறமொழி நெஞ்சங்களே கூகிள் டிரான்ஸ்லேட் உதவியுடன் எந்த மொழிகாரரும் நமது பிளாக்கை படித்து விடுகிறார் ) உங்கள் அனைவருக்கும் சிங்கிள் டீ குடித்தாலும், தெம்பாக தமிழில் உரையாடும் நமது பரம்பரைகளே, அலுவலகத்தில் அமர்ந்து பிளாக்களை ஒன்றுவிடாமல் மேய்ந்துவிடும் அன்பு நண்பர்களே… 111 நாடுகளை சேர்ந்தவர்களே ( மீதி எங்கப்பா ? ) எல்லாருக்கும் உறுதியுடன் ஆணையிட்டு ஒன்றே ஒன்று சொல்கிறேன்.
  deepavali-greetings

  Tamil Blogs Traffic Ranking
  More than a Blog Aggregator
  Thiratti.com Tamil Blog Aggregator
  Thenkoodu

  துலாஸ்தானம்… ஐப்பசியில் ஒரு வரப்பிரசாதம்..

  துலாஸ்தானம்… ஐப்பசியில் ஒரு வரப்பிரசாதம்..
  Thulasthanam ..
  ஆன்மீகத்தில் அளவில்லாத நம்பிக்கையும், இந்திய பாராம்பரிய மிக்க பழக்கவழக்கங்களையும், நடைமுறைகளையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த தேசத்தின் மைந்தர்களே… வணக்கம்.. இந்த அக்டோபர் மாதம், நமக்கு பல நல்ல விஷயங்களை கொண்டுவருகிறது.. முதல் வாரமே அமோகமாக லஷ்மி/சரஸ்வதி பூஜைகள் செய்திருப்போம். காந்தி அடிகளின் பிறந்தநாளை கீளின் இந்தியா திட்டம் பிரதம மந்திரி திரு. மோடி அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த படங்களை காண http://sbupdates.mygov.in/ செல்லவும்.
  1
  அடுத்து வரும் தீப ஒளித்திருநாள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஒரு மகிழ்ச்சிகரமான விழா… இந்த ஐப்பசி மாத்த்தில் தான் துலாஸ்தானம் வருகிறது. அதாவது நதிகள் ஓடிக்கொண்டிருக்கும் கரையில் உள்ள கோயில் உள்ள ஸ்தலமாக, குறிப்பாக கரூர்/ஈரோடு மார்க்கத்தில் உள்ள கொடுமுடியில் நதியில் குளித்து கரையில் உள்ள வன்னிமரத்தினடியில் அமைந்துள்ள கடவுளை 21 முறை பயபக்தியுடன் சுற்றிவரும் பட்சத்தில் ஒவ்வொருவரின் கர்மவினைகள் தீமைகள் குறைந்து நன்மைகள் நடக்கவும், விருப்பங்கள் நிறைவேறவும் வாய்ப்பாகும் என, ஒரு பிரபல ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
  Tamil Blogs Traffic Ranking
  More than a Blog Aggregator
  Thiratti.com Tamil Blog Aggregator
  Thenkoodu