தனிஒருவன் … தி கிரேட் மூவி…
THANIORUVAN … THE GREAT MOVIE
ஆரம்பமே அசத்தல், கடத்தி செல்லும் இரு பெண்கள் கதற, ஒரு இளைஞர் அடித்து துவைத்து கண்டெய்னர் லாரியில் ஏற்றிவிட்டு 4 இளைஞர்களும், ஜெயம் ரவி (மித்ரன் படத்தில் பெயர்) இணைந்து செய்கிறார்கள்… அப்பாடா மறுபடியும் ஒரு கொள்ளைக்கூட்டமா என்று அயர்ச்சி கொள்ளும்பொழுது ஐவரும் 10 நிமிடம் சிசி கேமராவை ஜாம் செய்துவிட்டு உறாஸ்டலில் திருட்டுத்தனமாக ஏறிக்குத்து செட்டிலாகிறார்கள். அடுத்தநாள் தான் நமக்கு தெரியவருகிறது… கடத்திவரப்பெற்ற பெண்கள் இருவரும், ஒரிஜினல் கடத்தல்காரரின் மனைவியும், தம்பியும் இளைஞர்கள் கடத்திப்பட்ட 5 இளம் சிறார்கள் மீட்பது… டிவிஸ்ட்..
ஜெயம்ரவி, ஒரு ஐபிஎஸ் அதிகாரி மிசொரி ( என்னா அழகான இடம்… ) பயிற்சியின்போது, எதிர்பாராமல் ஜொள்ளுவிடும் நயன்தாரா (இவரும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி) இருவருக்கு இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனாலும் பயாலஜி ஒர்க் ஆகாமல் ஒட்டாமலே பாட்டுபாடிக்கொண்டு இருக்கிறார்கள்…எனினும் இனிமையான ஜோடியாகத்தான் தெரிகிறார்கள்.
மித்ரனின் ஒரே நோக்கம், கடுமையான குற்றங்களைப்புரியம் டாப் 3 யை தூக்குவதுதான், அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் செய்தித்தாள்களின் வரும் செய்திகளின் பிண்ணனி அதன் தொடர்ச்சி, பின்புலம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்துகொள்ளும் சிறப்புகுணம்…எதிர்பாராமல், கிரானட் கொள்ளைகாரர், மருத்துவகொள்ளைக்காரர், பெரிய ரவுடி மூவரைப்பற்றியும் அறிந்து கொள்ளும்பொழுதுதான் இம்மூவரையும் இயக்குபவர் ஒருவர் அர்விந்த்சாமி, பின்புலம் அரசியலில் அப்பாவை மந்திரியாக்கியதும் சின்னவயது அர்விந்த்சாமிதான் எனத்தெரிந்து அவரைப்பின்தொடர்கிறார். கேன்சர் மருத்துக்கான இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாகும்பொழுது எவ்வளவு முயன்றும், முடியாமல் போகவே, அர்விந்த்சாமி எதிரியான மித்ரனை உடம்பில் உள்ள ஸ்பையை வைத்து ஆப்ரேஷன் செய்துவிடுவதால் என்னசெய்தாலும், பேசினாலும் உடனுக்குடன் அர்விந்த்சாமிக்கு தெரியவரவே, அதனால், மித்ரனின் நண்பனை இழக்கவும், எந்தசெயலிலும் தோல்வியே மிஞ்சுகிறது. கடைசி 20 நிமிடங்களின் போதுதான் தன் உடலில் உள்ள ஸ்பையை அகற்றி அதை வைத்தே, அர்விந்த்சாமியை குழப்பி, இறுதியில் அர்விந்த்சாமியை என்கௌன்டர் திட்டத்தில் இருந்து காப்பாற்ற முயற்சிசெய்கிறார். ஆனால் என்ன நடந்தது, படத்தைப்பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.
மிகஅருமையான நடிப்பு ஜெயம்ரவி, நண்பர்கள், அர்விந்த்சாமி, தம்பிராமையா, நயன்தாரா.
இசையும், படப்பிடிப்பும், இயக்கமும் அருமை.