கேடிபில்லா கில்லாடி ரங்கா… திரைவிமர்சனம்

கேடிபில்லா கில்லாடி ரங்கா… திரைவிமர்சனம்
KEDI BILLA KILLADI RENGA .. TAMIL FILM REVIEW

கொஞ்ச காலத்திற்கு முன்னால், முந்தானை முடிச்சு, பயணங்கள் முடிவதில்லை, உயிருள்ளவரை உஷா, ஒருதலை ராகம், வசந்த மாளிகை போன்ற பல படங்களை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என மனகிளர்ச்சியை கிளப்பிவிடும் படங்கள் தற்காலத்தில் எதையும் சொல்ல முடியலையேன்னு வருத்தம் இருந்தது, அதைப்போக்கவே இந்த கேபிகிரா.
t0
பசங்க பாண்டியராஜ் தனது முழுத்திறமையையும் இந்த படத்தில் காட்டியுள்ளார், படம் முழுக்க திருச்சி பொன்மலை ரயில்வே ஸ்டேஷன், கோட்டை ஸ்டேஷன் மற்றும் திருச்சியின் ஒரு சில இண்டுஇடுக்குகளில் கிட்டத்தட்ட 10..20 லொக்கேஷன்கள் மட்டுமே திரும்பி திரும்பி வருது.. ஆனாலும் அலுக்கவில்லை காரணம். ரயில்.. ஒவ்வொரு சீனிலும் ரயில் வருது போகுது பேக்டிராப்பில் ( நமக்குத்தான் தெரியுமே யானையும், ரயிலையும் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காதுன்னு )

பில்லா படத்தை பார்த்துக்கொண்டே குழந்தை பிறந்ததால் கேடி பில்லாவாம்… அய்யோ அய்யோ.. மற்றபடி, விமல், காமெடி கார்த்திகேயன், புரோட்டா சூரி மற்றும் இருவர் மொத்தத்தில் 5வர் கூட்டணி சேர்ந்து படம் முழுக்க குடிக்க, வீட்டில் சண்டை போட, எதாத்தமான பிரிக்க முடியாத நண்பர்கள், காதலித்தால் நட்பு பிரிந்துவிடும் என நூல்விடும் பெண்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும், ஒரு கட்டத்தில் இருவருமே தனித்தனியே இரண்டு பெண்களை நூல் விடுவதும், அதன் தொடர்ச்சியாக காட்சிகள் சிரிப்பலையை உண்டு பண்னுவதும் கடைசி வரை தொடர்கிறது.
t1
காதலி பறந்து பறந்து தாக்குவதும், மற்றொரு காதலி ஆள்வைத்து கடத்தி கொட்டித்தீர்ப்பதும், அப்பா பையனுக்காக செய்த செலவை டைரியில் எழுதி (மனைவிக்கும் தனியாக) கடனை செட்டில் செய்ய சொல்வதும், பையனை கண்டிக்காமல், கடைசியில் ரயிலில் மாய்ந்து ரயில் வேலையை வாங்கித்தரும் அப்பா ? சூரியின் மாமனார் எப்பொழுதும் திட்டுவதும், சூரியின் மனைவி போடாடேய்ன்னு விரட்டுவதும்.. அன்றாட வாழ்வில் நடப்பதை படம் பிடித்துக்காட்டுகிறார் நம்ம பாண்டிராஜ் அண்ணாச்சி. வாழ்க தங்களின் பணி…
t2
நல்லவேளை பாட்டெல்லாம் எதுவும் போடவில்லை.. கடைசியில் அனைத்து காரெக்டர்களும் தங்கள் பங்குக்கு இளைஞர் பட்டாளத்தை வாருவதும், முடிவாக ஐவர் கூட்டணியும் தனித்தனியே செட்டிலாவதும் ஓ.. போட வைக்கிறது.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு