பீஸ்சா….கிட்ட சிக்கிகிட்ட பக்கிகள்….

பீஸ்சா….கிட்ட சிக்கிகிட்ட பக்கிகள்….
PIZZA … HUTTING BY TEENS
சும்மா இருந்த சங்கை ஊதி ஊதிக் கெடுத்தாங்களாம்.. அதுபோலத்தான் நேற்று ஆனது. விடுமுறைநாள்… சாயங்காலம் ஆக ஆக பசங்க நச்சரிப்பு தாங்க முடியல… இன்றைக்கு பீஸ்சா வாங்கித்தந்தே ஆகனும்… சரி ரொம்ப நாளாகவே கேட்டுக்கிட்டே இருப்பதால், தவிர்க்க இயலவில்லை. இணையத்தில் ஆர்டர் செய்தால் 50 சதவீதம் தள்ளுபடின்னு பையன் சொல்ல, வேண்டாண்டா, இப்போ ஆர்டர் செய்தால் நாளைக்குத்தான் வரும்ன்னு பொன்னு சொல்ல ஒரே கலாட்டா, கடைசியில் நேரடியாகவே கடைக்கு போய் வாங்கிவந்துடலாம்ன்னு கிளம்பிட்டோம்.
t1
கடையில் நுழைய முடியாத அளவிற்கு டூவீலர்/போர் வீலர்களை கண்டபடி பார்க் செய்து, உள்ளே நுழைய வழிகண்டு பிடிப்பதே ஒரு பிரமம்மத்தனம் செய்யவேண்டி இருந்தது. உள்ளே போனதும், ஏற்கனவே அமர்ந்திருந்தவர்கள் யார் இது புதுசான்னு ஒர கண்ணால் பார்த்துட்டு தங்கள் வேலையை (சாப்பிடுவதுதான்) செய்கிறார்கள். குழு குழுவாக பெரும்பாலும் 30 வயதுக்குள் இருப்பவர்கள் அதிகம் உட்கார்ந்து டப்பா டப்பாவாக வரவழைத்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
t2
ஆர்டர் செய்ய சொல்லும் இளவயது நங்கை, கொடுத்த விளம்பர பேப்பரை தலைகீழாகப் படித்தும், நமக்கு ஏது பெஸ்ட்ன்னு கண்டுபிடிக்க முடியலை. அப்படி இப்படி தலையை திருப்பி யார் என்ன சாப்பிடுகிறார்கள் என பார்த்தும் பெயர் சொல்ல முடியல.. ஒரு வழியா, டபுள் நான்வெஜ் / டபுள் வெஜ் பீஸ்சாவும், சிக்கன் கால் 2 / கேக் வகைகளில் இரண்டும் ஆர்டர் செய்தார்கள்.. அதை சாப்பிடுவதற்கே தனியாக டிரையினிங் எடுக்கனும் போல… ஒரே சீஸ்.. மிளகாய்த்தூள் காம்பினேஷன் இல்லைனா சாப்பிடவே முடியாது போலிருக்கு… ஆனா, அதைத்தான் இந்த பக்கிகள் விரும்பி விரும்பி சாப்பிடுகிறார்கள்.. இதுல வேற… எல்லா அடிக் ஆகும் பழக்கமும் கெட்டது இல்லைன்னு போஸ்டர்…
t3
காத்திருந்தோம்.. காத்திருந்தோம் அரைமணிக்குமேல் தான் வருகிறது… வெளியே மழைச்சாரல் அடித்தாலும், உள்ளே ஏசி கும்னுஅடிக்குது… ஒருபக்கம் எல்இடியில் ஸ்போர்ட்ஸ் சானல் ஓடிக்கொண்டிருக்க யாருமே சட்டை செய்யவில்லை… அருகில் அமர்ந்திருந்த பேமிலி ( அம்மா / அப்பா / மகன் (10வயது)) ஒரே ஒரு பீஸ்சா வாங்கி பிய்த்துக்கொண்டிருந்தார்கள்.. இளவட்டங்கள் அதிலும் இளமங்கைகள் அதிகளவில் விரும்பி இந்த பதார்த்தத்தை வாங்கி சாப்பிடுகிறார்கள்… அடிக்கடி தமது கைப்பேசி காலக்ஸியில் போட்டோ வீடியோவை எடுத்துக்கொள்கிறார்கள். பசங்க வந்ததை சாப்பிட்டுட்டு அடுத்த ரவுண்டுக்கு ஆர்டர் செய்ய சென்று விட்டார்கள்… ஒருவழியா போதும்ன்னு முடிக்கிறப்ப கிட்டத்தட்ட 1200 ரூபா காலி…
வீட்ல சும்மா இருந்தாலே டிவியை பார்த்து நேரத்தை கடத்தியிருக்கலாம்… சும்மா இருந்த சங்கை ஊதி ஊதிக் கெடுத்தாங்களாம்.. அதுபோலத்தான் நேற்று ஆனது.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

துப்பாக்கியில் சுட்ட பீட்ஸா …. 2 திரைப்பார்வை

துப்பாக்கியில் சுட்ட பீட்ஸா …. 2 திரைப்பார்வை
Thuppakki , Pizza – Tamil Film Reviews

கொஞ்சம் டியூப் லைட்தான்… எல்லாரும் அடித்துத்துவைத்து தூர போட்டபின் எடுத்து விமர்சனம் செய்வது…. என்ன செய்வது.. மின்தடையால் இப்போதான் இந்த லைட் எரிகிறிது…

1. பீட்ஸா

இளமை துள்ளும் இந்தக்கதையில் டெரர் எட்டி பார்க்குது ஆரம்பத்தில் இருந்தே ஒரு டூபாக்கூர் கதை கதைக்குள்ளேயே வளர்ந்து வருவதால் நமக்கு எது டூபாக்கூர் எது ஒரிஜினல்ன்னு பிரித்து பார்க்க இயலாததே இந்தப்படத்தின் வெற்றி…
t1
இளைஞன், இளைஞி இருவரும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தவர்கள் இளமை முழுவதும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள், கெட்டூகெத்தர் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள், சில நாட்களில் அந்த பெண் கர்ப்பாகிவிடுவதால் ( பாதுகாப்புகளை மீறி ) உடனே வீட்டிலேயே மோதிரம் மாற்றி திருமணம் செய்தும் கொள்கிறார்கள்.. இளைஞன் பீட்ஸா கடையில் சப்ளை செய்து சிறிது வருமானம் பெறுபவராகவும், இளைஞி பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதில் முன்னேற்றம் காண முனைபவராகவும், பீட்ஸா கடை ஓனர் மற்றும் இரு பணியாட்களும் இளைஞனுடன் நன்கு பழகுபவர்களாக இருக்கிறார்கள்… ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில், இளைஞன் கையில் 2 கோடி மதிப்பிலான பொருள் கிடைக்கிறது அதனை தன்னுடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டி இளைஞனும், இளைஞியும் சேர்ந்து முயற்சி செய்து வெற்றியும் ? பெறுவதுதான் … இந்த பீட்ஸா…
t0
படம் உண்மையில் ஒரு திரில்லர்தான்… அடுத்து என்ன என யோசிக்க விடாமல், காட்சியமைப்புகள்… இந்த இளமை டீம்முக்கு தமிழ் திரையுலகம் தனது பாராட்டு என்னும் பட்டு கம்பளத்தை விரித்து வரவேற்கிறது.

2. துப்பாக்கி
t2
நீண்ட நாளுக்குப்பின் விஜயின் ஒரு வெற்றிப்படம்,
வழக்கமான அட்டு பில்டப்கள் இல்லாமல், வெத்துவேட்டு பஞ்ச்கள் இல்லாமல், நார்மல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வேடத்தில் விஜய். இரானுவத்தில் இருந்து 40 நாட்கள் விடுமுறையில் வரும் விஜய் அண் கோ ( வீடு மும்பையில் இருப்பதாக எடுத்துக் கொள்ளவும் ) சேர்ந்து எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு சந்தேகப் பார்ட்டியை பின்பற்றி 20 இடங்களில் சாதரண மனிதர்கள் போலவே இருக்கும் தீவிரவாதிகள் ஒழித்து கட்டுவதும் இதனால் 20 இடங்களில் குண்டு வெடிக்க இருப்பதைத் தடுக்கவும், பின்னர் இந்த தீவிரவாதிகளின் தலைவனை கண்டுபிடித்து அழிக்க தன்னையே பணயம் வைக்கவும் விறுவிறுப்பான காட்சிகளால் நம்மை ஆனந்தப்படுத்துகிறார் இயக்குனர் முருகதாஸ். தொட்டுக்க ஊறுகாய் மாதிரி காஜல் வந்தாலும், பொருத்தமான இடங்களிலேயே காட்சிகள் அமைவதால், மெயின் கதைக்கு சங்கடமில்லை… கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் லாஜிக் பார்க்கமால் பார்க்கனும்…. மத்தபடி இதுவும் ஒரு வெற்றிப்படம் தான்.
t3
இந்த இரண்டு படங்களிலும், பொதுவாக சிரத்தையெடுத்து மக்களை எவ்வாறு திருப்திபடுத்துவது என்பது வெவ்வேறு சிந்தனைகளில் உருவாக்கி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு