வாழ்க வளமுடன் … அமிர்தம் உதவிக்கரங்கள்

அன்பார்ந்த் உறவுகளே, பார்வையாளர்களே,

வணக்கம். நமது உறவினர்கள் ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தத் தமிழ்நாட்டை விட்டு மலேசியாவிற்கு சென்று செட்டில் ஆகி அடுத்தடுத்த தலைமுறையினர்கள் தற்சமயம் அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள். நிற்க. திருச்சி.. சேலம் மெயின் சாலையில் இருந்து வடக்கு நோக்கி (சுமார் 7 கிலோமீட்டர் உள்ளடங்கி) , மூவானுர் மார்க்கமாக 3 கிமி முன்னதாக உள்ள கிராமம்தான் கீழக்கண்னுகுளம். அங்கிருந்து 2 கீமி மேற்கில் அமைந்துளளது மேலக்கண்னுகுளம். மிக அழகிய கிராமம்.

தற்சமயம், அந்த கிராமத்தின் முன்னோர்களை நினைத்து, அவர்களுடைய வாரிசுகள் அவ்வப்பொழுது கிராம மக்களுக்கான உடைகள். மளிகை சாமான்கள். அரிசி, பருப்பு போன்றவைகளை தருவித்து அனைவருக்கும் வழங்கி வருகிறார்கள்.

கடந்த 13.04.2021 அன்று திரு. ரகுநாதன் அவர்களின் சார்பாகக் மேலக்கண்னுகுளம் மக்களுக்கு ரூ.1050 மதிப்பிலான அரிசி பருப்பு மற்றும் ரூ,21 மளிகை சாமான்கள் திருச்சியில் புகழ்பெற்ற ஆனந்தா ஸ்டோர்ஸ் என்னும் நிறுவனத்தில் இருந்து வரவழைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வாத்தியார் வீட்டு திரு. துரைராஜ் அவரின் மகன் திரு. தியாகராஜ் அவரின் மகன் திரு. சிவனேஷ் ஆகியோரால் முன்னிருந்து 50 பயனாளருக்கு வழங்கப்பட்டது. அதன் காட்சிப்படங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை என அறியப்படுகிறது.

நன்றி வணக்கம்.. இது போன்ற நிகழ்வுகளை இனித்தொடர்ந்து பதிவு செய்யப்படும்.

ஒரு தமிழரின் பொங்குதல் … ராஜராஜசோழன்

ஒரு தமிழரின் பொங்குதல் …

HISTORY OF TAMILANS

இதைபடித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் .உங்களுக்கும் அந்த மாதிரி தோன்றினால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் …உலக மக்களின் பார்வை படும்மெரினாவில்அண்ணா சமாதி,எம்ஜிஆர் சமாதி,ஜெயலலிதா சமாதி,கருணாநிதி சமாதியில்,ராமசாமி நாயக்கர் சிலையென்றுஎல்லா எழவும் இருக்குதுஎங்கடா அந்த ராஜராஜ சோழன் சிலை ?எங்கடா போனது என்சூர்யவர்மன் சிலை?எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்?எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்தபாண்டிய மன்னர்கள் நினைவு மண்டபம்.?எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை?எங்கடா இருக்கு என் வேலுநாச்சியார் சிலை ?எங்கதான்டா இருக்கு சேரன் செங்குட்டுவனின் சிலை ?எங்கடா அந்த அழகுமுத்தோடநினைவு மண்டபம்.?எங்கு பார்த்தாலும்அண்ணா அறிவாலயம்அண்ணாநகர்,அண்ணா சாலைஅண்ணா சிலைபெரியார் மண்டபம்பெரியார் பேருந்து நிலையம்பெரியார் சாலை பெரியார் சிலைகலைஞர் கருணாநிதி நகர்.கருணாநிதி சிலை,எம்ஜிஆர் மணிமண்டபம்எம்ஜிஆர் பல்கலைகலகம்எம்ஜிஆர் பேருந்து நிலையம்எம்ஜிஆர் நகர்எம்ஜிஆர் நூலகம்எம்ஜிஆர் சாலைஎம்ஜிஆர் சிலைஅடுத்தால அம்மா, சின்னம்மாபுஜ்ஜிமா,கட்டுமரம்இப்படி சொல்லியே நாசமா போங்கடா!..உலக சாம்ராஜ்யங்களைவென்றுகாட்டிய நம் முன்னோர்களுக்கு சரியானசிலைகளுமில்லை,நினைவு கட்டிடங்களும் இல்லை.அவர்களின் வரலாறும் வகுப்பறைப் பாடத்திட்டத்தில் ஒழுங்காக இல்லைஇடையில் வந்து நம் மதத்தை அழித்து மக்களை மிரட்டி மதம் மாற்றி மறுத்தால் கொன்று குவித்த அத்துணைகழிசடைகளின் வரலாறும்பாடத்திட்டத்தில் ஓங்கி ஒலிக்கிறதே! வெட்கமாக இல்லை!கரிகாலன் கட்டிய கல்லணைஇன்றுவரை சுற்றுலாத் தலமாகமாற்றப்படவில்லை.

மாபெரும் கடற்படையை கட்டமைத்துஉலகின் பல நாடுகளை வென்றுமாபெரும் சோழப் பேரரசை நிறுவியராஜேந்திர சோழனை பற்றிஇங்கே கற்பிக்கப்படவில்லை!ஒவ்வொரு தமிழனும் தினமும் கோவிலுக்கு செல்கிறான்அந்தக் கோவிலைக் கட்டியவன்யாரென்று கூடத் தெரியாமல்அந்தக் கோவிலைக் கட்டியமாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல் இருந்தாலும் கூட அப்பேற்பட்ட அவனது நடுநிலைத்தன்மையைப்பாராட்டி நீ அல்லவாஅவனது பெயரை உலகம் போற்றிட செய்திருக்க வேண்டும்.?ஒன்றுமே செய்யாமல்இருந்துவிட்டாயே நன்றி கெட்டவனே.பசுவுக்காக தன் மகனையேகொன்ற சோழனின் கல்லறையை பாரடா..கஜினி முகமதுவை பதினேழு முறை ஓடவிட்டு விரட்டியநம் ரஜபுதன ராஜாக்களின் நினைவினைப் போற்றடா..தான் கட்டிய கோவிலில் தன் பெயரை எழுதாமல் அதில் வேலை செய்த சிற்பக்கலைஞர்களின் பெயரை எழுதி வைத்த நம் ராஜ ராஜ சோழனின் கல்லறை எங்கே! மணிமண்டபம்தான் எங்கே!?இப்பேர்பட்ட ஒரு மாமன்னனை கேவலம் காசுக்காக சாயம் பூசி கூத்தாடும் கூட்டம் கேள்வி கேக்குது.தெற்காசியாவை ஆண்டஒரு மாமன்னனின் கல்லறையை நீ வைத்திருக்கும் கோலத்தைப் பாரடா !மானங்கெட்ட தமிழனே.அப்படி என்னாடா இந்த இடையில் வந்த கொள்ளையர்கள்உனக்கு செய்துவிட்டனர் ?இடையில் வந்த ரெண்டு நல்ல மனுஷன் கக்கனும்,காமராஜரும்.கக்கன் யாரென்று யாருக்குமே தெரியாது.காமராஜரை சாதி சங்க தலைவராய் மாற்றி வைத்துவிட்டாய்.ஐய்யா முத்துராமலிங்கத் தேவரை சாதிதலைவராய் மாற்றி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.மாகராஷ்ட்ராவில் எத்தனையோதலைவர்கள் ஆண்டாலும் இன்றும், முதல் மரியாதை சத்திரபதி சிவாஜிக்குத்தான்.அந்த மான உணர்வு உனக்கு ஏனடா இல்லாமல் போனதுதமிழனே..!விழித்திடு தமிழா : போதும் இந்த மாயை1.ஈவேரா சாதியை ஒழித்தார்…அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்….2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்…டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி…3.ஈவேரா ராமரை ஒழித்தார் …உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது…4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் …மூலவரை தரிசனம் செய்ய முப்பது மணிநேரம் காத்திருப்பு …5.ஈவெரா சமுகநீதி காத்தார்….90 மார்க் எடுத்தவன் வீதியில் பிச்சைகாரனாய் ..35 மார்க் எடுத்தவன் ஏசி ரூமில் ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..ஆக மொத்தத்தில் ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே…!!! கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது,மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது,கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது,தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது,கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது, ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாதுதன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாதுஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாதுஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாதுஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாதுமுதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் புலிதேவனை தெரியாது மற்றும் அழகுமுத்துகோனை தெரியாது, பாதர் பிள்ளை, வீரன் சுந்தரலிங்கம் தெரியாதுஇவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,எதுவுமே செய்யாத பெரியார் என்கிற பிரிவினைவாதியை மட்டுமே தெரிய வைத்தது தான். இந்த வெட்கம் கெட்ட திராவிட கொள்கை…

நன்றி. திரு. ராஜன், தினமலரின் வாசகர் பதில் அளித்தலில்

க/பெ ரணசிங்கம்… திரைப்பார்வை

வாழ்க வளமுடன்,  நீண்ட இடைவெளிக்குப்பிறகு குரோணாவால், சின்னத்திரையிலேயே ஒரு திரைப்படத்தைப் பார்க்க டெக்னாலஜி நம்மை உந்தித்தள்ளிவிட்டது.   முதலில் இந்தப்படத்தை வாங்கி வெளியிடும் ஜி டிவி குரூப்பிற்கு நன்றி சொல்வோம்.  ஏனெனில், இதன் வெற்றியைப்பெறுத்தே பலத் திரைப்படங்கள் இதேபோல் நமக்கு காட்சிக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

இராமநாதபுரம், தண்ணீர் இல்லாத வறண்ட நிலம்தான் கதைக்களம்.   அப்பாடியோ, ஏசி ரூமில்உட்கார்ந்து சொகுசாக திரியும் நமக்கு, இந்தத் திரைப்படம் நெற்றியில் அடித்ததுபோல் எதார்த்தை அப்படியே உரித்து வைத்துள்ளது.  

  1. ரணசிங்கம் இளைஞர் (விஜய்சேதுபதி,அவருடைய மணிமகுடத்தில் இந்தப்படமும் ஒரு சிறகு, இயற்கையான நடிப்புக்கு சொந்தக்காரர்) அநியாயத்தை தட்டிக்கேட்கும் பொறுப்புள்ள குடிமகன் மற்றும் நிலத்தில் நீரோட்டம் பார்க்கும் திறமைசாலி.
  2. ஒரு முறை நீரோட்டம்பார்க்கும்பொழுது சுட்டி இளைஞி ஐஸ்வர்யா ராஜேஷ் யிடம் மோதல் ஏற்பட்டு காதாலாகவும் பின்னர், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டு, திருமணம் நடைபெறும் நாளில் 144 தடை இருப்பதால், இரகசியமாக இரவில் சொற்ப சொந்தங்களுடன் திருமணம் முடிகிறது. (முதற்படம் காக்கா முட்டையில் ஸ்கோர் செய்ததை விட இந்தப் படத்தில் 200 விழுக்காடு எதார்த்தானமான நடிப்பை வெளிப்படுததி இருக்கிறார்.
  3. குடிநீருக்காக வீட்டுக்கு வீடு 4 பிளாஸ்டிக் குடம் ஏந்திய தள்ளுவண்டியில் நீர்கிடைக்கும் இடத்தில் இரவு பகல் பாராமல் பெண்களால் மட்டுமே சென்று நீர்பிடித்து வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள்.   (பகீர்)
  4. பி. விருமாண்டியால் இயக்கப்பட்டுள்ள இந்தத்திரைப்படத்தை அவசியம் நாம் காணவேண்டும்.  ( ரூ.199 மட்டுமே)
  5. அச்சர சுத்தமான இராமநாதபுர உட்கடை கிராமத்தினை கண் முன்னால் கொண்டு வந்தமைக்கும், இறந்தவர்களுக்கான கிராம சடங்குகளை முன்னெடுத்து செய்வதை காட்சிபடுததியத்தற்கு நன்றி.
  6. கதை இதுதான். பொருளாதார நெருக்கடியால், ரணசிங்கம் துபாய்க்கு வேலைக்கு சென்றுவிட,  குழந்தைக்கு காதுகுத்தும் நாளில், ரணசிங்கம் இறந்துவிட்டார் என தகவல்வர அதன்பின் அவர் மனைவி படும்பாடு நமது அரசாங்கம் /  கோர்ட் / அரசியல்வாதிகள் / வக்கீல் / மாநில அரசு / மைய அரசு என தட்டும் கதவுகள் எல்லாம் அசட்டையாகவும் பொறுப்பைத் தட்டிக் கழித்து  ( மாவட்ட ஆட்சியர், தாசில்தார், விஏஓ, பதிவாளர், தலைமைச்செயலக முதல்வர் அலுவலகம், எழிலகம்,  மையஅரசின் பாஸ்போர்ட் வெளிவிவகாரத்துறை அலுவலகம் என எவருமே சலிக்காமல் பொய்யான வாக்குறுதி அளித்து காலதாமதம் ஏற்படுத்தி ரணசிங்கத்தின் பிரேதத்தை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்.  ரேசன் கார்டு கணக்கெடுப்பு, திருமண பதிவாளரின் சேட்டை, (நம் அரசின் செயல்பாடு நம்மையே தலை குணியவைக்கிறது).
  7. இடையில் ஶ்ரீதேவி துபாயில் இறப்பது அதற்காக மொத்த தேசமும் துக்கம் கொண்டாடுவதும், உடனடியாக அவர் பிரேதத்தை வரவழைப்பது ( காசு இருந்தால் இந்த நாட்டில் இராஜா இல்லையென்றால் கூஜா தான் என்பதனை கண்ணத்தில் அடித்துக் கூறியிருபபது) வாவ்.
  8. அரபு நாட்டின், அதிகாரிகளும் மெத்தனமாக இருப்பதும், வெறும் இன்சூரன்ஸ் வேண்டுமானால் அனுப்பிவைக்கிறோம் என்று தகவல் கொடுப்பதும், அதில் காம்பரமைஸ் ஆகாமால், எனக்கு என் கணவரோட சடலம்தான் வேண்டும் என உறுதியாக நிற்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன்.
  9. இந்தப்படத்தில் ஒரு மாவட்ட ஆட்சியரே எவ்வாறு பொய்யான வாக்குறுதி தந்து பிரச்சினைகளை தள்ளிப்போடுவதும், தாசில்தாரே, மாவட்ட ஆட்சியரை தறக்குறைவாக நேரிடையாகவே பேசுவதும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.   
  10. ஆட்சியராக தினந்தந்தி பாண்டே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
  11. அனைத்து துனை நடிகர்களும், ( மத்திய அமைச்சர் ஒருவர், பிரதமர் வேடம் மோடி உள்பட) மெச்சும்படியாக நடித்திருப்பது இந்தப்படத்தின் பிளஸ் பாயிண்ட்
  12. கிளைமாக்ஸ் சூப்பர்.     படம் முடிந்தவுடன்தான் டிவிஸ்ட்.

அவசியம் தவறவிடாமல் பார்க்கப்பட வேண்டிய படம்.    அனைத்து கலைஞர்களும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள். இசை, தண்ணியில்லாத காட்டை காட்டும் கேமராவின் கண்கள். 

(பின்குறிப்பு) சிவபார்கவி நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிளாக் எழுத திரும்பியுள்ளார்.   ஆதரவிற்கு நன்றி.  குறையிருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.  

திரௌபதி

நாடெங்கும் ஒரே பேச்சு இந்த படத்துக்கு போகாதீங்க சாதீய திரைப்படம் என குரல்கள் ஒலித்தது.  நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை கிடைத்த சிறிய ஓய்வில் இந்தப்படத்தைப் பார்த்துவிடலாம் என ஒரு சிறிய நகரில் புதிதாக புதுப்பிக்கப்ட்ட திரையரங்கில் காண வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்தே கதாநாயகன், யாரையோ போட்டுத்தள்ள பிளான் செய்து நகருக்கு வந்து நண்பனுடன் தங்கி வஞ்சம் தீர்க்க வேண்டி சைக்கிளில் டீ விற்பவராக உலா வருகிறார்.

கதை இதுதான், விழப்புரம அருகில் இயற்கை கொஞ்சும் கிராமம் மற்றும் ஒற்றுமையான கிராம மக்கள் வசிக்கும் சேந்தமங்கலம் கிராமத்தில் ஒருவரை ஏமாற்றி தண்ணீர் நிரப்பும் பாக்டரியை சென்னையை சேர்ந்த தாதாவும் அவன் கூட்டாளியான ஒரு ரவடி வக்கீலும் நடத்துகிறார்கள், இதனை திரௌபதி என்னும் ஒரு தைரியமான காலத்திற்கேற் யூடியூப், பேஸ்புக் என அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் துணிச்சலான பெண் கிராமத்தலைவரின் தம்பி மகள் அவருடைய கணவர் (குஸ்தி) வாத்தயார்.

ஊர்ப்பஞ்சாயத்தில் தாதாவையும், ரவுடி வக்கீலையும் அவமானப்படுத்தி ஊர் ஒற்றுமையை நிலைநிறுத்தும், கிராமத்தலைவரை பழிவாங்க வேண்டி கல்லூரியில் படிக்கும் அவரது மகளை போலியான காதல் வலையில் சிக்க வைக்க பிளான் செட்டப் செய்து ஆளை அனுப்புகிறார்கள்.   காலம் கடந்தும் அந்த பெண் காதல் வலையில் சிக்காதாதால், தாதா குரூப் தந்திரமாக யோசித்து, சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலத்தில் (பெண்ணே இல்லாமல் போலியான ஆளை வைத்து) போலி ஆவணங்களுடன் எக்கசக்கமான லஞ்சம் கொடுத்து திருமணம் நடைபெற்றது போல் செட்டப்செய்து போலி ஆவணம் தயார் செய்து விடுகிறார்கள்.

குறிப்பிட்ட நாளில் கல்லூரி செல்லும், ஊர்த்தலைவரின் மகள் லஷ்மியை தோழியரின் உதவியுடன் 3 மணிநேரம் செல் போனை ஆப் செய்ய தந்திரமாக நாடகமாடி திரைப்படத்திற்கு சென்றவர்களை.  ஊரைவிட்டு ஓடிவிட்டதாக பொய் வதந்தியை பரப்பியும், பொய்யான திருமணப்பதிவு நகலைக் காட்டியம் அவருடைய மன உறுதியைக்குலைத்து தற்கொலை செய்து கொள்ள செய்து விடுகிறார்கள். பின்னர், தந்திரமாக போலியான மாப்பிள்ளையை வைத்தே

காவலுக்கு இருக்கும் கதாநாயகனை தற்காலிகமாகப் பிரித்து, லட்சுமி மற்றும் திரௌபதியையும் கொல்லுகிறார்கள்.    இதனை லஞ்சம் கொடுத்து காவல் துறையை திசைதிருப்பி திரௌபதி கணவனையும் கைது செய்கிறார்கள்.

சிறிது காலம் கழித்து, பெயிலில் வந்த திரௌபதி கதாநாயகன் (கணவண்) இந்த கொடுமைக்கு காரணமான தாதா, வக்கீலை போட்டுத்தள்ளவே சென்னை மாறுவேடத்தில் வருகிறார்.

வக்கீலை பின்தொடர்ந்து அப்பாவி பெண் ஒருவரைக் காப்பாற்றியும், அவரது மண்டையைப் பிளந்து அதனை நண்பன் மூலமாக வீடியோ எடுத்து, போலீஸ்க்கு அனுப்ப அதனை சீரியசாக எடுத்து சிறப்பு காவலரை நியமித்து கதாநாயகனை தொடந்து கண்காணிக்க ஆள் அனுப்புகிறது. போலீஸ். இவரை மோப்பம் பிடிக்கும் போலீஸ்க்கு முழுகதையும் தெரியாமல், கதாநாயகனை என்கவுண்டரில் போடப் போகும்பொழுது, திரௌபதியின் நட்பு யூடியூப் பெண் ஒருவரால் திரௌபதி சாகவில்லை என்ற உண்மை தெரியவருகிறது. அதனைத்தொடர்ந்து, பொய்யான 3200 பதிவுகளை மேற்கொண்ட சார்பதிவாளர் பேஸ்புக்கில் லைவ் ஆக தவறை ஒப்புக்கொள்ள வைத்து, விஷம் குடிக்க வைக்கிறார் கதாநாயகன், திரௌபதியின் நட்பு மருத்துவரின் உதவியால் மூளைச்சாவு அடைந்த திரௌபதி அவர் உடலில் வளரும் சிசுவைக் காப்பாற்றி, சாவத்தற்கு முன்னால் திரௌபதி எனது குழந்தை இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்னால் இதற்கு காரணமானவர்களை வேரறுப்பேன் என சபதம் மேற்கொண்டதை அவர் கணவர் நிறைவேற்றுகிறார்.  இதற்கிடையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல் கருணாஸ் தொடரும் பொதுநல வழக்கின் மூலமாக உண்மை வெளிஉலகிற்கு தெரிய வந்தாலும், காவல்துறையும் அரசு வக்கீலும் கடைசிவரை இதனை மறைக்க முயற்சி செய்ய, போலியான திருமணம் நடந்ததை பெண் கேமராவில் பதிவு செய்ததை கோர்ட்டில் ஒப்படைத்து, இனிமேல் பதிவு திருமணங்கள் உரிய சிசிடிவி கேமரா பதிவு இல்லாமல் செய்யக்கூடாது என்றும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அந்தக் காட்சிகளை ஆவணமாக ஏற்றுக்கொள்ள சிறப்பு சட்டம் இயற்ற உத்தரவு இடப்படுகிறது.

திரைப்படம் காட்சிபடுத்தியிருககும் விதமும், அதனில் நடித்த நடிகர்களும் சும்மா சொல்லக்கூடாது பின்னிப்பிடல் எடுத்திருக்கிறார்கள். 2014ல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தினை அனைத்து பெண்மக்களும் அவசியம் பார்த்து விழிப்புடன் இருக்க நல்ல தருணம் இது.     மேலும், இதில் காண்பிக்கப்படும் தாதா, ரவுடி வக்கீல் போன்றவர்களால் ஏற்படும் பாதிப்புகளால் எத்தனை எத்தனை அப்பாவி மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனரோ.. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிடில், சாதாரணமான மக்களால் நிம்மதியாக வாழ முடியுமா என தெரியவில்லை.    காலம் கலிகாலம்.

முக்கியமான விஷயம் இதில் எந்த இடத்திலும் சாதியைப்பற்றியோ அல்லது சாதிப்படமாக சித்தரித்தத்துள்ளது முழுவதும் அப்பட்டமான பொய்.

முற்றிலும் சாதிக்கலவாவது திரெளபதி திரைப்படம்.

90 எம்எல்.. பெண்களுக்கான ஒரு அவமானம்..

இன்று உலகெங்கிலும் மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.   உண்மையில் உலகில் பிறந்த எவரும், மகளிர் இல்லாமல் பிறக்க வாய்ப்பில்லை.   மகளிர் என்பவராலேயே இந்த உலகில் அமைதி நிலவி வருகிறது, என்ற கூற்று மிகையில்லை.

சமீபத்தில் 90 எம்எல் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.  தயவுசெய்து இந்தப்படத்தை உங்களின் மீது அக்கறையுள்ள எந்த மகளிருக்கும் பார்த்துவிடாமல் இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.

 

  1. இந்தப்படத்தில் ஓவியாதான் முக்கிய கதாபாத்திரம், அவருடன் இணைந்து 4 மகளிர்கள் 1) ரவுடியை மணந்த விடலை கதாப்பாத்திரம், 2) பிஸினஸ் மேனை மணந்த வடநாட்டு பெண்.  3) சாப்ட்வேர் அம்பியை கைபிடித்த இளநங்கை மற்றும் 4) பணியில் இருக்கும் ஒரு இளநங்கை.
  2. ஓவியா உடன் கட்டுமஸ்தான இளைஞன் ஒருவனுடன் லிங்விங் டூ கெத்தர் என்ற முறையில் வாழ்க்கையை அனுபவிக்கும் ஓவியா, புதிதாக குடியிருக்க வரும் அபார்மெண்டில் சந்திக்கும் மேற்கண்ட நால்வரைச் சுற்றி மசாலா தடவி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
  3. தோழிகள் ஒவ்வொருவராக நட்புடன் தங்கள் சோகத்தை பகிர்ந்து கொள்ள அதை ஓவியா தனது நடப்பால் சரிசெய்யவோ அல்லது பிரச்சினையை முடிக்கவோ பார்க்கிறார்.
  4. சமீப காலத்தில் லிப்கிஸ்கள் அதிகமான அளவில் வரப்பெற்றது இந்தப்படமாகவே இருக்கும்.
  5. அளவுக்கதிமான இரட்டை வசனங்கள், பெண்கள் தங்கள் உடலை தாங்களே விமர்ச்சித்துக்கொள்ளுதல், உதாரணமாக மார்பு சதை குறைவாக உள்ள பெண். தோழியைப்பார்த்து கடவுள் எனக்கு இரண்டு புள்ளியைத்தான் வைத்திருக்கிறான் என புலம்புவதும்.
  6. உடலுறவை அனுமதிப்பதற்கு என தங்கள் கற்பை பங்களா என்ற சொல் மூலம் கொச்சைப்படுத்துவதும்… குறிப்பிடத்தக்கது.
  7. படத்தை நான்கு பகுதிகளாகப்பிரித்து நட்புடன் இருக்கும் மகளிர்கள் முதலில் டாஸ்மாக் சரக்கு பின்னர் பாரின் சரக்கு அப்புறம் கஞ்சா எனபோதை பழக்கத்திற்கு படிப்படியாக ஆளாவதைத் காண்பிக்கிறார்கள்.
  8. பாதிப்படம் முடிந்தவுடன் 45 எம்எல் என காட்டுவதும், திரை ஆக்கமும், பேக் கிரவுண்ட் மியூசிக், ரவுடிகள் சண்டை, கார்ப்பயணம், மொட்டைமாடியில் பார்ட்டி கொண்டாடுவது, நியூஇயர் கொண்டாட்டமும், சகலகலாவல்லவன் பாட்டை நிறுத்தச்சொல்வதும், கடைசியில், ரவுடி பாண்டியை நால்வரும் சேர்ந்து துவம்சம் செய்வதும் கொஞ்சம் மசாலா தடவிய சினிமா பார்ப்பது போலவும், சிம்பு என்ட்ரியும், லிப் கிஸ் கொடுத்து ஓவியா இணைந்து கொள்வதும், பாண்டிசேரியில் சேஸ் செய்து நட்பின் ஜோடியை சேர்த்து வைப்பதும், இங்கே யாரும் எதிர்பாராத டிவிஸ்ட் ஒன்றை வைத்து திரைப்படம் பார்க்க வந்த அனைவரையும் அதிரச்செய்தவிதம் அருமை.
  9. மொத்தத்தில் கலாச்சாரா சீரழிவை விளக்கும் அருமையான பெண் ரவுடிகளுக்கான திரைப்படம்.
  10. எனவே, குடும்பபாங்கான தமிழ்ப்பெண்கள் தயவுசெய்து இந்தப்படத்தை பார்க்காது இருக்க இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.

இரத்தம் சிந்தியது நாகையில்….

இரத்தம் சிந்தியது நாகையில்….
NAGAPATINAM A TRIP …
இனிதே வேளாங்கண்ணியின் முதல்நாள் இரவில் டிபன் சாப்பிட மெயின்ரோட்டில் தேடினோம்.. நல்ல கடையை கண்ணில் படவில்லை, ப்ரோட்டோவும், தோசையும் மட்டுமே பெரும்பாலான கடைகளில் கிடைத்தது. மக்களில் சிலர் இரவு டாஸ்மாக்கை தேடி ஊருக்கு ஒதுக்குபுறமாக கட்டப்பட்ட கடைகளுக்கு சாரிசாரியாக செல்கின்றனர். ஒரு சிலர் போதை அதிகமாக ரோட்டோரத்திலேயே படுத்துஉருள்கிறார்கள்.
பேமிலி ரூமில் 1.0 டன் ஏசியே பயன்படுத்துகிறார்கள், குளிர் குறைவாகவே வருகிறது, காலை 5 மணிக்கு எழுந்து கடற்கரையை நோக்கி போனோம் சூரிய உதயத்தைப்பார்க்க, ஆனால் மேகம் மூடியதால் சரிவர பார்க்க இயலவில்லை. அந்த காலைநேரத்திலும் கணிசமான மக்கள் கடற்கரையில் கூடுகிறார்கள்.

IMG_20170505_181124

கடற்கரை முழுவதும், ஒரே குப்பை பேரூராட்சி தயவுசெய்து சுத்தம் செய்யவும், தன்னார்வ தொண்டுநிறுவனம் அல்லது பேராலாய நிர்வாகமோ தானகவே முன்வந்து சுத்தம் செய்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தலாம், பெரும்பாலான கடற்கரை உணவுகள் சுகாதாரமற்று உள்ளது, கடலில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குடும்பம்குடும்பமாக குளித்து மகிழ்கிறார்கள், ஆனால் அலையில் சிக்கி கடலில் மூழ்கினால், காப்பாற்ற உள்ளூர் மீனவர்கள் உதவினால்தான் உண்டு. அரசு எந்தவிதமான (வெளிநாட்டில் இருப்பதுபோல் உயரமான சேரில் உட்காந்து ஒருவர் விசில் ஊதி எச்சரிப்பார், அல்லது விபத்து நிகழ்தால் உடனே குதித்து நீந்தி காப்பாற்றுவார்,) ஏற்பாட்டையும் செய்யவில்லை என்பது வருத்தற்குரியது, நாகை ஆட்சியர் கவனிப்பாரா.

IMG_20170506_061802

உள்ளூர் மக்கள் அனைத்து கடைகளிலும் திருநீர் பூசிக்கொண்டு மாதா பாடல் கேசட்களையும், இயேசு படத்தினையும விற்பதைப்பார்க்கலாம், இதன்காரணமாகவே வியாபாரம் அவ்வளவாக நடைபெறுவதாக்தெரியவில்லை, ஏதேனும் கன்சல்டண்ட் நிறுவனம் முன்வந்து உள்ளுர் வியாபாரிகளுக்கு கார்ப்ரேட் விற்பனை கலையை சொல்லித்தந்தால், இவர்களும் கார்,வீடு, வாசலுடன் நல்ல வசதியாக வாழவழிவகுக்கும். காலை உணவை லாட்ஜ் ஓனரே தயார் செய்து கொடுக்கிறார். தோசையும், தேநீரூம் நன்றாகவே இருந்து அனைவரும் ரசித்து புசித்தோம். பிறகு லாட்ஜை காலிசெய்துவிட்டு மீண்டும் ஒருமுறை அன்னையை தரிசித்து, தீர்த்தம்கொடுக்கும் இடத்திற்கு சென்றோம், அனைத்து இடத்திலேயும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.
10 மணி அளவில், நாகையை நோக்கி பயணப்பட்டோம், வெகு நாட்களுக்கு பிறகு மழை தூறல் போட்டது. சாலையெல்லாம் கழுவிவிட்டது போல் இருந்தது. நாகை பிரிவில் சரியாக கவனிக்காமல் திருப்பும் பொழுது, எதிரே வந்த அரசுபேருந்தில் மோத இருந்தோம், நல்லவேலையாக, அரசுபேருந்து பிரேக் செய்து நிறுத்தியதால் தப்பினோம். நாகையில் பெட்ரோல் போட பாரத் பெட்ரோலியம் நிலையத்தை தேடிபிடித்து பெட்ரோல் பிடிக்க, கார்டு ஸ்வைப் பண்ண சென்ற இடத்தில் கதவில் இருந்த ஆணி கிழித்து, விரலில் இருந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. பெட்ரோல் நிலையத்தினர் முதலுதவி செய்து இரத்தத்தை நிறுத்தினர். நாகையில் உள்ள நண்பருக்கு காலையிலேயே தகவல் அளித்திருந்தேன், ஆனால் அவரை மீண்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை. எனவே, பலரிடம் விசாரித்து கடற்கரைக்கும், லைட் உறவுஸ்க்கும் சென்றோம், சுநாமியால் தூக்கிவீசப்பட்ட படகு ஒருவீட்டில் மேல் இருப்பதை பார்த்தோம். ஒரே இளசுகளால் கடற்கரை நிரம்பியது பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியதால் உடனடியாக திரும்ப வேண்டியதாயிற்று. நாகை சிறிது முன்னேறியிருப்பதாகவே தோன்றுகிறது, இருப்பினும் பெரும்பாலும் கடல்சார்ந்த மற்றும் விவசாயமே தொழிலாக கொண்டிருப்பதாலும், பொருளாதாரம் சிறப்பாக மேம்படவில்லை என்பதே கண்கூடு. ஐடி நிறுவனம்கள், தொழில்சாலைகள் போன்றவைகள் இந்த நாகை மாவட்டத்தில் நிறுவினால் பலருக்கு வேலை வாய்ப்பும், நகரும் வளர்ச்சியடையும் எனத்தெரிகிறது. சென்னையைப்போன்று கடற்கரையும், கப்பல்வந்து செல்லும் துறைமுகமாக விரிவுபடுத்தினால் (மத்திய மந்திரியோ, மாநில மந்திரியோ கருணை வைத்தால்) நாகையும் முன்னேறலாம், (விலைவாசி அனைத்து இடத்தினைப்போலவே இருக்கிறது) வரும்பொழுது குருட்டாம்போக்கில் நகரின் உள்ளே பல தெருக்களுக்கு சென்று, வெளியேறினோம்.
திருவாரூர் அருகே சரியான போர்டு இல்லாமல், நகரின் உள்ளே சென்று டிராபிக்கில் மாட்டி பிறகு வெளியேறி, வரும்வழியில் ஒரு கிராமத்தில் பிரியாணி ( முட்டை + தக்காளிசாதம்) அனைவருக்கும் பெற்று, வழியிலேயே தண்ணீர் கிடைத்த ஒரு கிராமத்தில் சாப்பிட்டோம் நன்றாகவும், அதிகமாகவும் இருந்தது. தஞசை வரும்வரையில் ரோடு மிகமோசம், 4வழிபாதையாக மாற்றிவருவதால் குண்டும் குழியுமாக ரொம்ப சிரமப்பட்டு வரவேண்டியாதாகப் போயிற்று. ரோட்டேராத்தில் அரைகிலோ மீட்டருக்கு ஒருவராது பழம், சர்பத், இளநீர், பதநீர் போன்றவைகளை விற்பனை செய்கிறார்கள். ஒருசில இடத்தில் இருபுறமும் பசுமைவயல்களாகவும், பல இடத்தில் இருபுறமும் வறண்டும் காணப்பட்டது. தஞசையில் இருந்து அரைமணியில் 4 வழிப்பாதையில் டோ திருச்சியைத்தொட்டு, ரிலையன்ஸ் மார்க்கெட்டுக்கு (வரும் வழியில் இருப்பதால்) சென்று

IMG_20170501_111707

தேவைப்பட்டவைகளையும், தேவைப்படாதவைகளையும் பில் செய்து மீதமிருந்த 2500 ரூபாயையும் காலிசெய்து, நகரில் புதியதாக துவக்கப்பட்ட போத்தீஸ்க்கும் விசிட்செய்து , வேகாத வெயிலில் 4 மணி போல் வீடுவந்து இனிதே இந்த சிறிய சுற்றுலாவை நிறைவுசெய்தோம். இந்த சுற்றுலாவில் நானோவும், எனது டிரைவரும் (மகன்) மிகவும் சிறப்பாகவே செயல்பட்டது மனதுக்கு நிறைவை அளித்தது. வீட்டிற்கு வந்தவுடன்தான், அப்படியே வேதாரண்யம் சென்றிருக்கலாம் என்று குடும்பஉறுப்பினர்கள் மாற்றுக்கருத்தை வைத்தனர்.
Tamil Blogs Traffic Ranking

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

வேளாங்கண்ணி … ஒரு ஆன்மிக இன்பச்சுற்றுலா

வேளாங்கண்ணி … ஒரு ஆன்மிக இன்பச்சுற்றுலா VELANKANNI – SUMMAR TRIP

                     வெயில் அடித்து நொறுக்கி,  சில வருடமாக மே மாதம் செல்லும் சுற்றுலா தடைபெற்று போக, இந்த வருடம் கண்டிபாக சுற்றுலா செல்லாம் என முடிவெடுத்து, பழனிக்கு போய் மொட்டை போடாலாம் என்றும், பாண்டிக்கு போய் பாருக்கு போகலாம் என்றும், ஆளாளுக்கு ஒன்று கூற, கடைசி நிமிடத்தில் அன்னையை தரிசிக்க வேளாங்கண்ணிக்கு போகலாம் என தெரிவிக்க குடும்பத்தினர் வேற வழியில்லாமல் ஒத்துக் கொண்டார்கள்.                 காலையில் 5 மணிக்கு எழுந்து கிளம்பிவிடலாம் என முடிவாகி, நெட்டை துரத்தி துரத்தி பிடித்ததில் காலையில் அனைவரும் எழுந்ததே ஏழு மணி, பரவாயில்லை என அவசர அவசர மாக கிளம்பி, இடையில் வீட்டம்மா சுட்ட இட்லியை உள்ளே தள்ளி நால்வரும் நானோவில் உள்ளே, வண்டியை ஸ்டார்ட் செய்யுடா மவனே…( றி றி… எனக்கு வண்டி ஓட்டத்தெரியாதே….) என விசில் கொடுக்க மணி 9 ஆகிவிட்டது.                      IMG_20170505_111823 மத்தியஅரசின் தயவால் 4 வழிசாலையாக தஞ்சை வரை அடுத்த 40 நிமிடத்தில் பயணித்து எந்தவழியில் செல்வது எனத்திகைத்து மன்னார்குடிக்கே போகலாம் என அந்தவழியில் வண்டியை செலுத்தியாயிற்று..  மன்னார்குடியில் சித்தி வீடு இருக்கு இருந்தாலும் முன்அறிவிப்பு இல்லாமல் போகக்கூடாது என்ற தர்மத்த்தால் அங்கே ஒரு சிறிய கடையில் சர்பத் மட்டும் சாப்பிட்டு ( நன்றாக இருந்தது நன்னாரி சர்பத்) வண்டிக்கும் கொஞ்சம் ஓய்வு (நானோ இல்லையா)

                       IMG_20170505_111816அடுத்து, 11 மணிக்கு திருத்துறைப்பூண்டி ரஸ்தாவில் எங்கள் வண்டி பயணித்தது என்பதை விட ஊர்ந்தது என்பதே சரி, அப்பப்பா எத்தனை வளைவு, நெளிவு, சாலையில் பள்ளங்கள் இல்லாத இடம் குறைவு.. ஆனால், இவ்வளவு வறட்சியில் இரு பக்கத்திலும் பசுமையான நெல் வயல்கள்,, போர்வெல் தயவால்.. பார்க்க பரவசமாகத்தான் இருந்தது.. நான் சிறுவனாக இருந்தபோது திருச்சியில் இருமடங்கும் சாலை ஓரத்தில் சாதரணமாக பார்த்த காட்சி.. இப்பொழுதுதான் காணக்கிடைக்கிறது.

                        திருத்துறைப்பூண்டியில், எனது பழைய நண்பர் காதர் மொய்தீன் சிங்கப்பூர் பேன்சிகடை 30 வருடங்களுக்கு முன் வைத்திருந்தார்.  இப்பொழுதும் இருக்கிறாரா என எட்டிப்பார்த்தேன் கடை இருக்கிறது.  ஆனால் அவரைப்பற்றி எந்த விவரமும் இல்லை. கடையில் இருப்பவரோ ஏதோ யாசகம் கேட்க வந்துட்டார் என துரத்தாத குறையாக துரத்திவிட்டார்.             அடுத்து, 2 வழி கடற்கரை சாலை வேளாங்கண்ணி வரையிலும் செல்கிறது, வழியில் செலவிற்காக ஒரு கிராமத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சும்மா 100 ரூபாயாக அழுக்கு நோட்டாக கொட்டித்தீர்த்தது.  வேளாங்கண்ணியில் நுழைந்தவுடன் நுழைவு சீட்டு தொல்லையெல்லாம் இப்போ இல்லை, ரோடெல்லாம் சும்மா சூப்பராக போட்டிருக்காக, ஆங்காங்கா நல்ல ஆர்ஓ குடிநீர், கட்டணமில்லா சுத்தமான கழிப்பறையெல்லாம் ஜோராக கட்டி உட்டுருக்காங்க.

                     ஒரு நாள் தங்க பிளான் செய்திருந்தால், ரூம் தேடினோம், சுமார் ஏசி போட்டாக்கா 2 ஆயிரம், ஏசி இல்லைன்னா 1 ஆயிரம் என காதில் விழுந்தது.  என்ன செய்ய, அடிக்கிற வெயிலுக்கு ஏசி ரூமே போடலாம் என பேரம் பேசி 1200க்கு சகாயமாதா (வீடு) கெஸ்ட் அவுஸ்ல இடம் பிடித்து கொஞ்சம் இளைப்பாறினோம்.   மாலை 4 மணிக்கு எழுந்து அன்ணையை தரிசிக்க சென்றோம்.   இளைஞனாக இருக்கும்பொழுது பலமுறை வேளாங்கண்ணிக்கு வருவது உண்டு.  இடையில் பலகாலம் வர வாய்யில்லை.    தற்பொழுது சர்ச்சில் காலை வைத்தவுடன் உண்மையில் உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது.. எனது மகள் எனது கையை பிடித்தவுடன்தான் அந்த பீலீங் மறைந்தது.

                   IMG_20170505_184023

                        அன்னையிடம் பலரும் மண்டியிட்டு தங்கள் குறைகளை வெளிப் படுத்துவதும்,  கேரளா மாநிலத்திலுந்தும், கோவா, கர்நாடாகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளனமானவர்கள் குடும்பத்துடன் வருகிறார்கள்.  மனமுருகி வேண்டுவதும், சிறிய பொருள் அல்லது முக்கியம் எனக்கருதும் டாக்குமெண்ட் போன்றவற்றை அன்னையின் பாதத்தில் வைத்து திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள்.   எந்தவிதமான தள்ளுமுள்ளு, பணியாளர்கள் தொல்லை, எதும் இல்லை.  பணியாளர்களும் இன்முகத்துடன் பணிபுரிகிறார்கள்.   கலர் கலரான மெழுகுவர்த்திகள்பூமாலை 10 ரூபாயில் இருந்து 500 வரை விற்பனையாகிறது.   அவரவர் சக்திக்கேற்ப வாங்கி அன்னைக்காக வழிபாடு செய்கிறார்கள்.

IMG_20170505_183634

                     கிழக்கு பார்த்த அன்னையின் சர்ச்சில் ஒருமணிக்கு ஒருதரம் பூசை சுமார் 15 நிமிடம் மட்டும் நடைபெறுகிறது.  தமிழ், ஆங்கிலம், கொங்கன், மலையாளம் என மொழிகளில் ஒவ்வொருமுறையும் நடைபெறுகிறது.  பேராலாயத்தை சேர்ந்தவர்கள் ஒரு பிட் இடத்தைக்கூட விடாமல் பிளான் செய்து பூங்கா, பார்க்கிங், கடைகள், தங்குமிடம், காட்சியிடம் என சுத்தமாகவும், கூட்டம் கூடா விடாமல் அவ்வப்பொழுது வழிகளை மாற்றி அமைத்தும் விடுகிறார்கள். சர்ச்க்கு பின்னால் ஒரு பெரிய சர்ச் அதனில் விரிவான பூசை நடைபெறும் போல… பலர் அதில் கலந்து கொள்ள, நமக்கு ஆர்வமில்லாதால் கடற்கரையை நோக்கி நகர்ந்தோம்.

                                                                                                (தொடரும்,,, 1)

5 வது வருடம் … வேர்டு பிரஸ்…நன்றி

அன்பாந்த வலையுலக நட்புகளே,

இந்த பதிவினை ஆரம்பித்து 5 வருடம் முடிந்துள்ளது.  

நன்றியுடன் என்றென்றும்

அன்புடன்

சிவபார்கவி

ann5yrs

 

எங்கே போனாய் ?

இந்தபிளாக்கை வாசிக்கும் அன்பு நெஞ்சங்களே, தவிர்க்க இயலாத சொந்த வேலை காரணமாக ( வீடு மாறுதல் மற்றும், புதுகை வலைப்பதிவர்கள் மாநாட்டில் 2ம் பரிசு பெற்றும் … தொடர் வேலைகள் காரணமாக பதிவுகள் இடப்பட…

மூலம்: எங்கே போனாய் ?