மழைன்னா சும்மாவா….

மழைன்னா சும்மாவா….
Rain Rain come again…
அப்பாடா, தலைவா வரவில்லையானும், தமிழ்நாட்டுக்கு சென்றவாரம் வந்துட்டார் மிஸ்டர் மழை அண் கோ, வான்மேகம் கருத்து, வான்மழை ஒருவழியாக தமிழ்நாட்டையும் எட்டிப்பார்த்து விட்டது, திடுதிப்புன்னு காய்ந்து கிடந்த மேட்டூர் டேம் 121 அடிக்கு உயர்ந்து உபரி நீர்களை வெளியேற்றும் வகையில் அமைந்தது. சில மாதங்களுக்கு முன்னால் பலரும், பல இடங்களிலும், நந்தி சிலைகளை தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதில் மூழ்கடித்தும், பெரிய பெரிய அண்டாக்களில் நீர் நிரப்பி மந்திரம் ஓதுவோர் அதில் உட்கார்ந்து கொண்டும் மழை வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டு வந்தனர், அதைப் பார்க்கும் பொழுதெல்லாம், இதுவெல்லாம் எங்கே பலிக்க போகிறது என்றே தோன்றியது. ஆனால், அதையெல்லாம் தோற்கடிக்கும் விதமாக மழை இப்பொழுது பெய்து தண்ணீர் பிரச்சினையை தற்காலிகமாக நிறுத்திவிட்டது. மழையைப் பார்த்தவுடன் அனைத்து மக்களும் மகிழ்ச்சியடைந்ததும், காவேரி கரையில் ஈரோடு, திருச்சி, தஞ்சாவுர் வரையிலும் லக்கி பிரைஸ் அடித்தது போல் ஆடி 18 விழாவை சிறப்பாக கொண்டாடியதும், ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் குளிக்க போய் தண்ணீரில் மூழ்கி பரலோகம் போனதும் உண்டு.
x3
( அங்கே ஒரே கூட்டம், யாரோ இருவர் தண்ணீரில் மூழ்கிஇறந்துவிட்டனராம் என மக்கள் பதறிஅடித்து ஓடிக்கொண்டிருந்தனர். அம்மாமண்டபம், புதிதாக திருமணம் முடித்த தம்பதியர் தங்கள் எதிர்கால கனவுகளை பற்றி சந்தோஷமாகவும், விரிவாகவும் காவேரி கரையில் அமர்ந்து மாலைநேரத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அரைமணி கழித்து அந்த ஆண் குளிக்க ஆசை என தண்ணீரில் இறங்குகிறார், தசைப்பிடிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்குவதைக்கண்ட பெண் காப்பாற்ற தானும் இறங்குகிறார்.) (நன்றி சுஜாதா எழுதிய ஒரு கதை, சுருக்கமாக )
x2
எதிர்காலத்தில் மீண்டும் இதுபோல் பிரச்சினைகள் எழாமல் இருக்க மழைபெய்யும் பொழுது அந்த நீரை நாம்வீணாக்கமால் சேமிக்க மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயம் அனைத்து வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் என கூறைகள் தோறும் அமைத்தோமானால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. அதேபோல, நீர்நிலைகள், ஏரிகள், குட்டைகள் போன்றவைற்றை சுத்தப்டுத்தி, பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்துள்ளது வைத்தால் ஒரளவு நீர்ப்பிடிப்பு ஏற்படுத்தி நிலத்தை தண்ணீர் பிடிப்பு பகுதிகளாக வைத்திருக்கலாம்.
x1
இதனை அனைத்தையும் அரசாங்கமும், அதன் இயந்திரங்களுமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்காமல் ஆங்காங்க ஒரு சிறு குழுக்கள் நாமாகவே முன்வந்து ஏற்படுத்தி செயலில் இறங்கலாம். அண்மையில், திருச்சியில் உள்ள மாவடிக்குளம் என்னும் குளத்தை 145 ஏக்கர் நிலத்தை தனியார் அமைப்புகள் கூட்டாக தூய்மைப்படுத்த கிளம்ப வேறுவழியில்லாமல் அரசும் விழித்துக்கொண்டு அதனை முழுமையாக முடித்துவைக்க 45 ஏக்கர் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றியும், பலதுறைகளால் முடிக்கப்பட வேண்டிய வேலைகளை செய்தும் அப்பணியை சிறப்பாக செய்துமுடிக்கப்பட உள்ளது.
இதேபோல, பல திட்டங்களும் மக்களின் பங்களிப்பு இருந்தால், நிச்சயம் வெற்றிபெரும். அரசும் தன்பங்குக்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.
அதே போல், மழை நீர் வரவழைக்க, அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் ஆர்வம் காண்பிக்கப்பட வேண்டும்.

இப்படிக்கு,
மக்கள் நலனை விரும்பும்
பொழுது போகாத பொம்மு
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu